கேரள பெண் ஒருவர் பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால் முன்பு தமிழ் பாட்டுக்கு நடனமாடிய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைத்தளங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை. தற்செயலாக செய்யக்கூடிய சிறிய செயல்கள் கூட பெருமளவு கவனத்தை ஈர்த்து விடுகின்றன. சமூக வலைத்தளங்களின் உதவியால் இன்று பலரும் பிரபலங்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் கேரள பெண் ஒருவர் தமிழ் பாட்டுக்கு நடனமாடிய வீடியோ இன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மாடலிங் துறையில் சாதித்து வரும் பிரியங்கா ஷெனாய் மேனன் என்ற கேரளாவைச் சேர்ந்த இளம்பெண், பெங்களூருவில் உள்ள ஷாப்பிங் மால் முன்பு நீல நிற குர்தா அணிந்தவாறு ‘யாத்தி யாத்தி’ என்ற தமிழ் பாடலுக்கு அருமையாக நடனமாடி அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து தற்போது அது வைரலாக பரவி வருகிறது.
இந்த வீடியோவை பார்த்தவர்கள் கேரள பெண்ணின் நளினமான ஆட்டத்தை ஆகா ஓகோவென புகழ்ந்து தள்ளுகின்றனர். கேரள பெண்ணின் முக பாவனைகள் மற்றும் நடன அசைவுகள் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது. இதுவரை 50,000க்கும் மேற்பட்டோர் இந்த நடன வீடியோவை பார்த்திருக்கின்றனர். 5,000க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
'யாத்தி யாத்தி' பாடல் யாசின் நிசார், அனுராதா ஸ்ரீராம் மற்றும் அபிஷேக் சி.எஸ் ஆகியோர் பாடிய மிகவும் பிரபலமான மியூசிக் வீடியோவாகும். விஜய் டிவியின் ‘குக் வித் கோமாளி’ புகழ் அஸ்வின் மற்றும் ஹர்ஷதா விஜய் ஆகியோர் லீட் ரோல்களில் நடனமாடிய இந்த வீடியோ ஏற்கனவே யூடியூபில் கவனம் ஈர்த்த மியூசிக் வீடியோவாகும்.
விஜய் டிவியின் ஆபிஸ் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான கோவையைச் சேர்ந்த அஸ்வின், ரெட்டை வால் குருவி, நினைக்கத்தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியர்களில் நடித்துள்ளார். இவர் குக் வித் கோமாளி - சீசன் 2 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். முன்னதாக ஓ காதல் கண்மணி, ஆதித்ய வர்மா போன்ற படங்களில் சின்ன ரோல்களில் நடித்திருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Instagram, Trending, Viral Video