PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / '300 கோடி, உலக மகா உருட்டு' - வாரிசு கலெக்‌ஷெனை சீண்டும் ப்ளூ சட்டை மாறன்!?

'300 கோடி, உலக மகா உருட்டு' - வாரிசு கலெக்‌ஷெனை சீண்டும் ப்ளூ சட்டை மாறன்!?

Varisu : கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது.

வாரிசு

வாரிசு

நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த மாதம் 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வசூல் சாதனை படைத்துவருகிறது. வெளியாகி 25 நாட்களுக்கு மேலாகியும் பெரும்பாலான திரையரங்குகளில் வாரிசு படத்துக்கு நல்ல வரவேற்பு இருந்துவருவதாக கூறப்படுகிறது. இந்த வாரம் 7 புதிய படங்கள் திரையரங்குகளில் வெளியாவதால், வாரிசு, துணிவு படங்களின் வசூல் பாதிக்கக்கூடும் என திரை வர்த்தகர்கள் பலரும் கணித்தனர். ஆனால் அவர்களின் கணிப்பை பொய்யாக்கி இரண்டு படங்களும் நல்ல வசூலைப் பெற்றுவருகிறது.

துணிவு படத்தின் வசூல் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாத நிலையில் வாரிசு படத்தின் வசூல் அவ்வப்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுவருகிறது. அந்த வகையில் வாரிசு படம் இதுவரை ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி கிரியேஷன்ஸ் அறிவித்தது. இந்த வசூல் கணக்குக்கு கலவையான விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் ஷேர் ஆகி வருகின்றன. ரூ.300 கோடி வசூல் என்பது நம்பும்படியாக இல்லை என சிலர் பதிவிட்டுள்ளனர். அதேவேளையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சந்தேகம் ஏன் என சிலர் பதிவிட்டு வருகின்றனர். இதற்கிடையே சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் விவரம் எதையுமே குறிப்பிடாமல் 300 கோடி, உலக மகா உருட்டு என பதிவிட்டுள்ளார்.

 

முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளியான விஜய்யின் பிகில் திரைப்படம் ரூ.300 கோடி வசூலித்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது 2வது முறையாக விஜய்யின் வாரிசு படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள்


 

Tags:Varisu

முக்கிய செய்திகள்