தமிழக முதல்வர் ஸ்டாலின் மனித நாகரிகத்தின் உச்சம் என்று இயக்குனர் பாலா பாராட்டு தெரிவித்துள்ளார்.
வாழ்த்தா இல்லை நன்றியா? பாலா சொன்னது நன்றிதான். ஆனால், அதைவிட சிறந்த வாழ்த்து இருக்க முடியாது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக பெரும்பான்மை தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதலமைச்சராக பொறுப்பேற்ற முதல்நாளே ஐந்து முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு, ஒட்டு மொத்த தமிழர்களின் வரவேற்பை பெற்றார் முதல்வர். அவரது சீரிய நடவடிக்கைகளுக்கு உலகம் முழுவதிலிருந்தும் வாழ்த்துகள் குவிகின்றன. குறிப்பாக, தேர்தல்வரை வாய்மூடி இருந்த திரையுலகினர், ஸ்டாலின் முதல்வரானதை வரவேற்று பதிவுகள் இட்டனர். நேரில் சென்று சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். ஸ்டாலினால்தான் சிறப்பான ஆட்சி தர முடியும் என்று இவர்கள் உண்மையாகவே நம்பியிருந்தால், தேர்தலுக்கு முன்பு ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியை வெளிப்படையாக ஆதரித்திருக்கலாமே? வெற்றி பெற்றபின் இப்படி பேசுவது திரையுலகினரின் சந்தர்ப்பவாதம் என்று எழுத்தாளர் வே.மதிமாறன் உள்ளிட்ட சிலர் விமர்சிக்கின்றனர்.
Also read... இயக்குனர் வெங்கட்பிரபுவின் தாயார் காலமானார்...!
"மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு,
தேவையற்ற வாழ்த்துரைகள் தெரிவிப்பதை தவிருங்கள் என்று கேட்டுக் கொண்டீர்கள். ஆனாலும், இதைத் தவிர்க்க முடியவில்லை. தங்களின் செயல் மற்றும் பண்பான நடவடிக்கைகள் அனைத்தும் மனித நாகரிகத்தின் உச்சம். நன்றிகள்."
வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன்
கோனோக்கி வாழுங் குடி. (குறள்)
பாலா - இயக்குனர்
- இவ்வாறு குறளை குறிப்பிட்டு முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார் பாலா.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Director bala, MK Stalin