பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் தமிழின் முக்கியமான எழுத்தாளர் பணிபுரிகிறார்.
நந்தா, பிதாமகன் படங்களுக்குப் பிறகு மீண்டும் பாலா - சூர்யா ஒன்றிணைகிறார்கள். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் படத்தை தயாரிக்கிறது. டிசம்பரில் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்த்த நிலையில், எதற்கும் துணிந்தவன் வெளியீட்டு புரமோஷன் பணிகள் சூர்யாவுக்கு இருப்பதால் படப்பிடிப்பை மார்ச் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளனர்.
பாலா தனது வழக்கமான தேனி, பெரியகுளம் பகுதியில் இந்தப் படத்தை எடுக்கிறார். பெரியகுளம் சென்று லொகேஷன் பார்த்து திரும்பியவர் தற்போது எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனுடன் ஸ்கிரிப்டை இறுதி செய்யும் பணியில் உள்ளார். இதற்கு முன் நான் கடவுள் படத்தில் ஜெயமோகனுடனும், அவன் இவன் படத்தில் எஸ்.ராமகிருஷ்ணனுடனும் பாலா பணிபுரிந்திருக்கிறார். இந்தமுறை மீண்டும் எஸ்.ராமகிருஷ்ணனுடன் கூட்டணி அமைத்துள்ளார்.
Also read... டிசம்பர் வெளியீட்டிலிருந்து விலகிய குருதி ஆட்டம்...!
பாலா கடைசியாக இயக்கிய படங்களில் நாச்சியார் மட்டுமே சுமாராகப் போனது. அவன் இவன், தாரைதப்பட்டை எல்லாம் தோல்வியடைந்த படங்கள். வர்மா படத்தை தயாரிப்பாளர்கள் ஒட்டு மொத்தமாக நிராகரித்தது மற்றுமொரு அடி. இதற்கெல்லாம் பதிலடியாக ஒரு வெற்றி வேண்டும். அதுவும் பிதாமகன், நான் கடவுள் போன்ற வெற்றி. அதை இந்தப் படத்தில் பாலா சாதிப்பாரா என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Actor Suriya, Director bala