உலக அளவில் வெப் தொடர்கள் பல வருடங்களுக்கு முன்பே பிரபலம் அடையத் தொடங்கின. இந்தியாவில் இந்தி வெப் தொடர்கள் சர்வதேச கவனத்தை பெற்றன. ஆனால், தமிழ் வெப் தொடர்கள் இன்னும் தமிழக ரசிகர்களையே சென்றடையவில்லை. விதிவிலக்காக தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி ஓரளவு வரவேற்பை பெற்றது.
திரையரங்குகள் திறப்பது இன்னும் தள்ளிப்போகும் என்ற நிலையில் தமிழின் முன்னணி நடிகர்களும் வெப் தொடர்கள் பக்கம் திரும்பியிருப்பது ரசிகர்களுக்கு நற்செய்தி. அதுவே திரையரங்குகளுக்கு கெட்ட செய்தி.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அதர்வா நடித்த பல படங்கள் தயாராகியும் இன்னும் வெளியாகாமல் உள்ளது. ஓடிடியில் வெளியிட தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், சற்குணம் இயக்கத்தில் அதர்வா நடிப்பில் புதிய படமொன்றை சமீபத்தில் தொடங்கினர். அதன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரசாத் முருகேசன் இயக்கும் வெப் தொடரிலும் நடிக்க உள்ளார்.
Also read... இணையத்தில் வைரலான கங்கனாவின் கவர்ச்சி புகைப்படம்!
அமேசான் பிரைம் வீடியோ கதிர் நடிப்பில் பிரமாண்டமான வெப் தொடர் ஒன்றை தயாரித்து வருகிறது. புஷ்கர் - காயத்ரியின் உதவி இயக்குனர் இயக்கியிருக்கும் இந்த வெப் தொடர் ஏறக்குறைய முடிந்துவிட்டது. சுழலி என பெயர் வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொடர் தமிழின் முதல் சிறந்த வெப் தொடராக அமையும் என்கிறார்கள். அந்தளவு சிறப்பாக வந்திருக்கிறதாம் தொடர்.
இவை தவிர அமலா பால், ரெஜினா, காஜல் அகர்வால் என நடிகைகளின் படையும் வெப் தொடரில் இறங்கியுள்ளனர். நாயகி மைய வெப் தொடர்களும் ஏராளமாக தயாராக இருக்கின்றன. திரையரங்குகள் இந்த போட்டிக்கு நடுவில் மூச்சுவிடவே சிரமப்படும் என்பது உண்மை.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Entertainment