PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / சோசியல் மீடியாவில் வைரலான பிரபல நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை

சோசியல் மீடியாவில் வைரலான பிரபல நடன கலைஞர் ரமேஷ் தற்கொலை

நடனமாடிய வீடியோக்களை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிரபலமடைந்த நடன கலைஞர் ரமேஷ் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 நடன கலைஞர் ரமேஷ்

நடன கலைஞர் ரமேஷ்

புளியந்தோப்பு கேபி பார்க் குடியிருப்பில் வசித்து வருபவர் டான்சர் ரமேஷ். இவர் நடனமாடிய வீடியோவை இன்ஸ்டாவில் வெளியிட்டு பிரபலமடைந்தார். தொடர்ச்சியாக பிரபல தொலைக்காட்சியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் நடனமாடி ரமேஷ் பாராட்டுகளை பெற்றார்.

அஜித் நடிப்பில் வெளியான துணிவு மற்றும் ரஜினி வெளிவர உள்ள ஜெயிலர் படத்திலும் சிறிய வேடங்களில் ரமேஷ் நடித்து பிரபலமடைந்தார். இந்த நிலையில் இன்று மாலை ரமேஷ் தனது குடியிருப்பின் 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக பேசின் பிரிட்ஜ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கணவன் - மனைவி இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக 10வது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

முக்கிய செய்திகள்