PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை பாடிய சிம்பு… தயாரிப்பு நிறுவனம் அப்டேட்…

வாரிசு படத்தின் ‘தீ தளபதி’ பாடலை பாடிய சிம்பு… தயாரிப்பு நிறுவனம் அப்டேட்…

வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

வாரிசு பட இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர்  தமனுடன் சிம்பு

வாரிசு பட இயக்குனர் வம்சி, இசையமைப்பாளர் தமனுடன் சிம்பு

வாரிசு படத்திலிருந்து வெளியாகவுள்ள தீ தளபதி பாடலை சிம்பு பாடியுள்ளார். இதனை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

விஜய் சேதுபதியின் DSP படத்திற்கு வெற்றி விழா கொண்டாடிய படக்குழுவினர்…

ஆக்‌ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. வாரிசு படத்திலிருந்து முதல் பாடலாக ரஞ்சிதமே என்ற பாடல் வெளியாகி யூ டியூபில் 75 மில்லியன் வியூஸ்களை கடந்துள்ளது.

அடுத்த பாடலாக ‘தீ தளபதி’ என்ற பாடல் நாளை டிசம்பர் 4ஆம் தேதி மாலை 4 மணிக்கு வெளியாகும் என்று படத் தயாரிப்பு நிறுவனம் நேற்று அப்டேட் வெளியிட்டிருந்தது.

377

இந்நிலையில், தீ தளபதி பாடலை பாடியதற்காக நடிகர் சிம்புவுக்கு தயாரிப்பு நிறுவனம் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்துள்ளது. இந்த பாடலை சிம்பு பாடியுள்ளார் என தகவல்கள் வெளிவந்த நிலையில் இன்றைக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

க்ரைம் த்ரில்லர்.. அமேசான் ஓடிடி வெளியீடு.. 'வதந்தி' வெப் சீரிஸ் எப்படி இருக்கு? ரிவ்யூ!

வாரிசு பட தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் வெளியிட்டுள்ள இந்த அப்டேட்டால் விஜய் மற்றும் சிம்பு ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Tags:Actor Vijay, Simbu

சிறந்த கதைகள்