PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடக்கம்..!

வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இன்று தொடக்கம்..!

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

Vijay Varisu : விஜய் நடிக்கும் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது. 

பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் வாரிசு திரைப்படத்தில் விஜய் நடித்து வருகிறார்.

விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் பீஸ்ட் படம் வெளியானது. பீஸ்ட் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்பதால் விஜய்யின் அடுத்த படமான வாரிசு படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளார். வாரிசு படத்தை இயக்குனர் வம்சி இயக்குகிறார். விஜய்க்கு ஜோடியாக நேஷ்னல் க்ரஷ் என்று அழைகப்படும் ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் உடன் ராஷ்மிகா மந்தனா பதிவிட்ட செல்ஃபி சமூக வலைதளங்களை  வைரலானது.

தளபதியுடன் போட்டோ வெளியிட்ட ராஷ்மிகா

வாரிசு திரைப்படத்திற்கான படைப்பிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வந்தன.  சுமார் ஆறு மாதங்களாக இந்த படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் வாரிசு திரைப்படத்தின் இறுதி கட்டபடப்பிடிப்பு தொடங்குகிறது என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.  இந்தப் படத்திற்கான வசன காட்சிகள் முழுவதும் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.  இரண்டு சண்டை காட்சிகளும், இரண்டு பாடல் காட்சிகளும் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. அதை அடுத்த மாத இறுதிக்குள் முடிக்க பட குழுவினர் திட்டமிட்டு இருக்கின்றனர்.

வாரிசு திரைப்படத்தை பொங்கல் பண்டிகைக்கு வெளியிட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்துள்ளது. வாரிசு திரைப்படத்தில் நடிகர் விஜய் உடன் பிரகாஷ்ராஜ், பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

 

Tags:Actor Vijay, Cinema, Shooting

சிறந்த கதைகள்