PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

நடிகை ராதாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகை ராதாவுக்கு கோல்டன் விசா வழங்கிய ஐக்கிய அரபு அமீரகம்!

நடிகை ராதா

நடிகை ராதா

இந்த மரியாதை எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நிறைய பங்களிக்க உதவும் என்று நான் நம்புகிறேன்.

நடிகை ராதாவுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியுள்ளது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஐக்கிய அரபு அமீரகம் கோலிவுட் பிரபலங்களுக்கு கோல்டன் விசாவை வழங்கி வருகிறது. அமீரகத்தில் வெளிநாட்டவர்களுக்கு நிரந்தர விசா வழங்கப்படுவதில்லை. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கும் முறையில் வழங்கப்படுவது தான் இந்தக் கோல்டன் விசா. முதலீட்டாளர்களின் வர்த்தக நிறுவனம் தோல்வியைச் சந்தித்தால் அல்லது அவர்களின் சொத்து மதிப்பு குறைந்தால் விசாவின் நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்படும். இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தைவிட்டு வேறு நாட்டில் 6 மாதங்களுக்கு மேல் வசித்தாலும் அவர்களின் விசா ரத்து செய்யப்படாது. இப்படிப்பட்ட கோல்டன் விசாவை நடிகை ராதா நாயருக்கு வழங்கியுள்ளது ஐக்கிய அரபு அமீரகம்.

நடிகை ராதா நாயர் தனது உற்சாகத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துக் கொண்டார். அதில், "அபுதாபி திரைப்பட ஆணையத்தின் இருப்பிடங்கள் மற்றும் அரசு வளங்களின் தலைவரான சமீர் முகமது அல் ஜபேரியிடமிருந்து மதிப்புமிக்க UAE கோல்டன் விசாவைப் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் பாராட்டி கோல்டன் விசா வழங்கியதற்கு நன்றி. எங்கள் வணிக நிறுவனங்கள் கேரளாவில் நன்கு நிறுவப்பட்டுள்ளன. எங்களிடம் ஹோட்டல்கள் மற்றும் ஓய்வு விடுதிகள், மாநாட்டு மையங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் சங்கிலி உள்ளது. இந்த மரியாதை எங்களின் எதிர்கால முயற்சிகளுக்கு நிறைய பங்களிக்க உதவும் என்று நான் நம்புகிறேன். திருமதி.மினி சர்மா அவர்களுக்கு சிறப்பு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

என் சாண்டா அவன்... பொன்னியின் செல்வன் மேக்கிங் ஸ்டில்களை பகிர்ந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

முன்னதாக டிசம்பர் 2021-ல், நடிகரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.பார்த்திபன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து கோல்டன் விசாவைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் ஆனார். சமீபத்தில் மூத்த நடிகர் நாசர், ரஹ்மான் மற்றும் இயக்குனர் வெங்கட் பிரபு, உலகநாயகன் கமல்ஹாசன் ஆகியோரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கோல்டன் விசாவைப் பெற்றனர். அதோடு நடிகை அமலா பால், த்ரிஷா மற்றும் ராய் லட்சுமி உள்ளிட்டோரும் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.

Tags:Tamil Cinema

சிறந்த கதைகள்