Home / News / entertainment /

நடிகர் சூர்யாவுக்கு இந்த எதிர்ப்பு புதிதல்ல.. அநீதிகளுக்கு எதிராக விடாது ஓங்கி ஒலிக்கும் சூர்யாவின் குரல்..

நடிகர் சூர்யாவுக்கு இந்த எதிர்ப்பு புதிதல்ல.. அநீதிகளுக்கு எதிராக விடாது ஓங்கி ஒலிக்கும் சூர்யாவின் குரல்..

சூர்யா

சூர்யா

சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை என ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க மேலும் அவரின் குரல் வலுவடைந்தது.

நடிகர் சூர்யாவுக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கும் இடையேயான மோதல் புதிதல்ல. அதிலும் கல்வி சம்பந்தப்பட்ட எந்த விவகாரமாக இருந்தாலும், அதில் மாணவர்களுக்கு பாதிப்பு இருந்தால் நடிகர் சூர்யாவின் குரல் ஓங்கி ஒலிக்கும் என்பதில் துளியளவும் சந்தேகம் இல்லை.

ஏனென்றால் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அகரம் என்ற அறக்கட்டளை மூலம் பல்லாயிர கணக்கான மாணவர்களின் கனவை நிறைவேற்றும் பணியை செய்து வருபவர் நடிகர் சூர்யா.மாணவர்களின் கல்வியே நாட்டின் வளர்ச்சி என எப்பொழுதும் மாணவர்களின் கல்வியை வாழ்வின் அங்கமாக மாற்றிக் கொண்டுள்ளார் நடிகர் சூர்யா.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எந்த சட்டம் வந்தாலும் அதற்குரிய எதிர்ப்பை தனது அறிக்கை வாயிலாக வெளியிடுவார். அதன் பிறகு அவர் சொல்லும் கருத்து ஊடகங்களில் விவாதிக்கப்படும். பின்னர் அதை பலரும் ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரலெழுப்பி பேசத் தொடங்குவர்.

சூர்யா போன்ற முக்கிய பிரபலங்கள் சமூக அக்கறையோடு இதுபோன்ற கருத்துக்களை முன் வைப்பதால், அந்த கருத்துக்கள் கடைக்கோடி வரை சென்று சேரும் என நடிகர் ரஜினிகாந்த் ஒரு மேடையில் தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து சூர்யா பேசிய கருத்து இங்கே சர்ச்சை ஆனது. இதே கருத்தை ரஜினிகாந்த் பேசியிருந்தால் பிரதமர் மோடி கேட்டிருப்பார் என்று இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். "சூர்யா பேசினாலும் மோடி கேட்பார்". இந்த விஷயத்தில் ’சூர்யா தெரிவித்த கருத்தை நான் ஆதரிக்கிறேன்’. மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலம் நிறைய உதவிகளை அவர் செய்து வருகிறார்.

Also read: தடுப்பூசி போட சிறப்பு முகாமை ஏற்படுத்திய சூர்யா..

மாணவர்கள் படும் கஷ்டங்களை நேரில் பார்த்து அறிந்த அனுபவம் அவருக்கு உள்ளது. எனவே சூர்யா பேசும் கருத்துகள் வரவேற்கத் தகுந்தவை என ரஜினிகாந்த் ஆதரவு தெரிவிக்க மேலும் அவரின் குரல் வலுவடைந்தது.  எதிர்காலத்தில் மக்களுக்கு அவரது தொண்டு தேவையாக இருக்கும்.” என்று ரஜினிகாந்த் பேசினார்.

அதேபோல நீட் தேர்வு ஏற்படுத்தும் ஒவ்வொரு பாதிப்புகளையும் மிக  உன்னிப்பாக கவனித்து வந்தார் நடிகர் சூர்யா. அப்பொழுது நீட் தேர்வால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தத்துடன் தனது இரங்கலை தெரிவித்ததோடு நீட் தேர்வு கட்டாய ரத்து செய்யப்பட வேண்டும் என அறிக்கை வெளியிட்டார்.

அதேபோல, தமிழக அரசு அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியதை வரவேற்றார். ஐந்தாம் வகுப்பு எட்டாம் வகுப்பு பொது தேர்வை ரத்து செய்ததற்கும் சூர்யா வரவேற்று அறிக்கை வெளியிட்டார்.

377

வெறும் கல்வியோடு மட்டும் நின்றுவிடாமல் விவசாயம் சார்ந்த சட்டங்களுக்கும் சூர்யா மட்டுமல்லாமல் அவரின் தம்பி நடிகர் கார்த்திக்கின் குரல் "உழவன்" என்ற அமைப்பின் வாயிலாக வெளியாகும். அதை சூர்யாவும் ஆதரித்துக் குரல் கொடுப்பார்.

அந்த வகையில் 3 வேளான் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் போராடிய விவசாயிகளுக்கு ஆதரவாக சூர்யா மற்றும் கார்த்தி கருத்து தெரிவித்தனர்.

அதேபோல, சுற்றுச்சூழல் மதிப்பீட்டு சட்டத்திற்கு எதிராகவும் நடிகர் சூர்யா "பேசாத மௌனம் மிக ஆபத்தானது" காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க என மிக காட்டமான கருத்தை தெரிவித்தார்.

Also read: இந்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறி சிறுமைப்படுத்துவதா? ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

தமிழகத்தில் அரங்கேறிய மிகப்பெரிய கொடூர சம்பவம் சாத்தான்குளம் லாக்கப் மரணம். இதில் பாதிக்கப்பட்ட அப்பாவி மனிதர் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும், "நீதி நிலை நிறுத்தப்படும் என்று நம்புவோம்" என தனது கருத்தை தெரிவித்தார்.

பெரும்பாலும் அவர் தெரிவித்த கருத்துக்கள் மத்திய அரசு கொண்டு வரும் கல்வி சட்டங்கள் குறித்து இருப்பதால் பாஜகவினர் நடிகர் சூர்யாவை கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

இருந்தாலும் அதையெல்லாம் அவர் பொருட்படுத்தாமல் குறிப்பாக அவருடைய ரசிகர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை தெரிவித்துள்ளதுடன் ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும் நம் வேலையை நாம் இப்போது செய்து கொண்டு இருக்க வேண்டும் என கட்டளையிட்டுள்ளார்.

இந்த நிலையில் மத்திய அரசின் ஒளிபரப்புச் சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா எதிர்ப்பு தெரிவித்து, ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக அவர், ''சட்டம் என்பது கருத்துச் சுதந்திரத்தைக் காப்பதற்காக.. குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல'' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனால் மீண்டும் சூர்யாவுக்கு எதிரான பாஜகவினர்  எதிர்க்குரல் எழுந்துள்ளது.

Tags:Actor Suriya, Suriya