PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / 'கதை தொடங்குகிறது' - திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் ஜோடி... குவியும் வாழ்த்துகள்!

'கதை தொடங்குகிறது' - திருமணம் செய்துகொள்ளும் பிரபல சீரியல் ஜோடி... குவியும் வாழ்த்துகள்!

பிரிட்டோவும் சந்தியாவும் ஜோடியாக ‘தவமாய் தவமிருந்து’ என்ற சீரியலிலும் நடித்துள்ளனர்.

சந்தியா - பிரிட்டோ

சந்தியா - பிரிட்டோ

சின்னத்திரை பிரபலங்கள் பிரிட்டோ - சந்தியா ராமச்சந்திரன் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளவுள்ளனர். 

‘ராஜா ராணி 2’ சீரியலில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் நடிகர் பிரிட்டோ விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார். 'தவமாய் தவமிருந்து' சீரியலில் தன்னுடன் திரையைப் பகிர்ந்து கொண்ட நடிகை சந்தியாவை அவர் திருமணம் செய்துக் கொள்கிறார். இவர்களது நிச்சயதார்த்தம் கடந்த ஜனவரி 25-ம் தேதி நடைபெற்றது. சந்தியா ராமச்சந்திரன் தங்கள் நிச்சயதார்த்த விழாவில் எடுத்துக் கொண்ட ஒரு படத்தை இன்ஸ்டகிராமில் பகிர்ந்துள்ளார். இருவரும் கைகோர்த்து நிற்கும் அந்தப் படத்திற்கு "நிச்சயதார்த்தம்" என்ற ஹேஷ்டேக்குடன் 'கதை தொடங்குகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டோ, 'அரசியல்ல இது எல்லாம் சதாரணமப்பா' என்ற நிகழ்ச்சியின் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார். அதன் பிறகு 'சின்ன தம்பி' என்ற தமிழ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அதோடு 'சரவணன் மீனாட்சி' போன்ற சீரியல்களிலும் நடித்தார். பின்னர் 'டான்ஸ் ஜோடி டான்ஸ் சீசன் 4' என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்றார்.

சந்தியா ஒரு மாடலாக பொழுதுப்போக்கு துறையில் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். மியூசிக் வீடியோக்கள் மற்றும் பிற படைப்புகளிலும் இடம் பெற்றார். முதலில் 'கோகுலத்தில் விதை' சீரியலில் நடித்த அவர், பின்னர் 'தெய்வம் தந்த பூவே' சீரியலில் நடித்தார். ‘சலூன்’, ‘பேய காணோம்’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பிரிட்டோவும் சந்தியாவும் ஜோடியாக ‘தவமாய் தவமிருந்து’ என்ற சீரியலிலும் நடித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:TV Serial

முக்கிய செய்திகள்