PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

Varisu: பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் வாரிசு... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

Varisu: பொங்கலுக்கு வெளியாகும் விஜய்யின் வாரிசு... புதிய போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

வாரிசு படம்

வாரிசு படம்

நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு வெளியாவதாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் வம்சி இயக்கும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார் விஜய். தில் ராஜு தயாரிக்கும் இப்படம் ஒரு எமோஷனல் குடும்பப் படம் என்று கூறப்படுகிறது. இதில் விஜய் வித்தியாசமான கேரக்டரில் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.

இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன்.

தற்போது ஹைதராபாத்தில் இப்படத்தின் கிளைமேக்ஸ் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஆக்‌ஷன், எமோஷன், ரொமான்ஸ், பொழுதுபோக்குடன் கூடிய இந்தப் படம் டிசம்பர் 5-ம் தேதி முதல் போஸ்ட் புரொடக்‌ஷனுக்கு செல்லும் என்று கூறப்படுகிறது. அதோடு தொழில்நுட்பக் குழுவினர் லடாக்கிற்கும் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு சில மான்டேஜ் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.

ரஜினிக்கு மிகவும் பிடித்த சீரியல் எது தெரியுமா?

இந்நிலையில் வாரிசு படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழுவினர், படம் பொங்கலுக்கு வெளியாவதை உறுதிப்படுத்தியுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

377

Tags:Actor Thalapathy Vijay

சிறந்த கதைகள்