PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / தளபதி 67 படத்தில் இணைந்த 2 பெரிய நிறுவனங்கள்… விஜய் ரசிகர்கள் உற்சாகம்

தளபதி 67 படத்தில் இணைந்த 2 பெரிய நிறுவனங்கள்… விஜய் ரசிகர்கள் உற்சாகம்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் பார்ட்னர்களாக இரண்டு பெரிய நிறுவனங்கள் இணைந்துள்ளன. இதனால் படத்தின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்பதால், படக்குழுவினரும், விஜய் ரசிகர்களும் உற்சாகமடைந்துள்ளனர். தமிழ்சினிமா ஆவலுடன் எதிர்பார்க்கும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தின் ஷூட்டிங், கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழுவினர் தனி விமானம் மூலம் காஷ்மீர் சென்றுள்ளனர். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா இடம்பெற்றுள்ளார்.

மஞ்சள் நிற புடவையில் மயக்கும் அதிதி சங்கர்..

அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் படத்தில் நடிக்கின்றனர். கத்தி, பீஸ்ட் படங்களை தொடர்ந்து அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பீஸ்ட் படத்தில் ஒளிப்பதிவு மேற்கொண்ட மனோஜ் பரமஹம்சா தளபதி 67 படத்தில் இணைந்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பாக எஸ்.எஸ்.லலித்குமார் இந்தப் படத்தை தயாரிக்கிறார். தற்போது தற்போது தளபதி 7 படத்தின் அப்டேட்களை தொடர்ச்சியாக தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் படத்தில் இடம் பெறும் நடிகர்கள் குறித்த அப்டேட் முதலில் வெளிவந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்று படத்தின் பூஜை தொடர்பான வீடியோ வெளியிடப்பட்டது. இந்நிலையில் தளபதி 7 படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் தொடர்பான அப்டேட் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி சாட்டிலைட் உரிமத்தை சன் டிவியும், டிஜிட்டல்  - ஓ.டி.டி. வெளியீட்டு உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் பெற்றுள்ளன. இதே போன்று ஆடியோ வெளியீட்டு உரிமையை சோனி மியூசிக் பெற்றுள்ளது. தளபதி 67 படத்தில் மிகப் பெரும் நிறுவனங்கள் இணைந்திருப்பதால், படத்தின் பிசினஸ் அடுத்த கட்டத்திற்குச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் படக்குழுவினரும் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags:Actor Vijay

முக்கிய செய்திகள்