PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / தாறுமாறான டெக்னிக்கல் டீம்… வெளியான ’தளபதி 67’ அப்டேட் முழுவிபரம்!

தாறுமாறான டெக்னிக்கல் டீம்… வெளியான ’தளபதி 67’ அப்டேட் முழுவிபரம்!

ஜனவரி 2, 2023 அன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்

விஜய்

விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் தளபதி 67 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ளது. இந்தப்படத்தின் முறையான அறிவிப்பு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. படத்தில் இடம்பெறும் நடிகர்கள் உள்ளிட்ட விபரங்கள் அடுத்தடுத்த நாட்களில் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இன்று மாலை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் மதிப்புமிக்க ப்ராஜெக்ட்டை அறிவிப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மாஸ்டர் மற்றும் வாரிசு படங்களின் வெற்றியை தொடர்ந்து தளபதி விஜயுடன் மூன்றாவது முறையாக இணைகிறோம். இந்த படத்திற்கு ‘தளபதி 67’ ஒர்கிங் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். எஸ். எஸ். லலித்குமார் இந்த படத்தை தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக ஜெகதீஷ் பழனிச்சாமி இடம்பெற்றுள்ளார். ஜனவரி 2, 2023 அன்று படத்தின் ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாஸ்டர் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் இணைந்துள்ளனர். கத்தி, மாஸ்டர், பீஸ்ட் படங்களைத் தொடர்ந்து ராக் ஸ்டார் அனிருத் ரவிச்சந்திரன் நான்காவது முறையாக தளபதி விஜய்யுடன் தளபதி 67 படத்தில் இணைகிறார்.

 

தளபதி 67 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் குழு பின்வருமாறு- ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, சண்டைப்பயிற்சி அன்பறிவ், எடிட்டிங் ஃபிலோமின் ராஜ், கலை சதீஷ்குமார், நடனம் தினேஷ், வசனம் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் மற்றும் தீரஜ் வைத்தி, எக்ஸிக்யூட்டிவ் தயாரிப்பாளர் ராம்குமார் பாலசுப்பிரமணியன். தளபதி 67 படத்தின் நடிகர்கள் குறித்த விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும். உங்கள் ஆதரவையும் ஆசீர்வாதங்களையும் எதிர்பார்க்கிறோம். இவ்வாறு தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:Actor Vijay, Lokesh Kanagaraj

முக்கிய செய்திகள்