குணச்சித்திர வேடங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் தனி இடம் பிடித்தவர் தலைவாசல் விஜய். 90களில் இவர் இல்லாமல் வெளியாகும் படங்கள் மிகக் குறைவு. காதல் கோட்டை படத்தில் இவரது நடனமாடிய கவலைப்படாதே சகோதரா என்ற பாடல் அப்போது மிகப் பெரிய ஹிட்.
தலைவாசல் என்ற படத்தில் அறிமுகமானதன் காரணமாக இவருக்கு தலைவாசல் விஜய் என்றே இவரது பெயர் மாறிப்போனது. கடந்த ஆண்டு இவரது நடிப்பில் டி பிளாக், யானை, லத்தி போன்ற படங்கள் வெளியாகியிருந்தன. தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் இவர் நடித்துள்ளார். பிற மொழி நடிகர்களுக்கு இவர் பின்னணிக் குரல் கொடுத்தும் வருகிறார்.
இந்த நிலையில் தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணாவிற்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வீரர் பாபா அபரஜித் என்பவரை திருமணம் செய்ய விருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இருவருக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
பாபா அபரஜித் ரஞ்சி கோப்பையில் தமிழ்நாடு அணிக்காக விளையாடியவர். மேலும் 19 வயதுக்குட்பட்ட உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்காக விளையாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.