தயாரிப்பாளர் முரளிதரன் மறைவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் லட்சுமி மூவி மேக்கர்ஸ் என்ற நிறுவனம் சார்பில் சுவாமிநாதன், முரளிதரன் மற்றும் வேணுகோபால் ஆகியோர் இணைந்து பல்வேறு பிரபல திரைப்படங்களை தயாரித்து உள்ளனர்.
குறிப்பாக கமல்ஹாசன் நடித்த அன்பே சிவம், விஜய் நடித்த பகவதி, அஜித்தின் உன்னைத்தேடி, சூர்யாவின் உன்னை நினைத்து, கார்த்திக் நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வெற்றியடைந்த உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் உள்ளிட்ட 28 திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.
இதில் தயாரிப்பாளர் சுவாமிநாதன் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக மரணம் அடைந்தார். இந்த நிலையில் முரளிதரன் நேற்று தன்னுடைய குடும்பத்தினருடன் கும்பகோணத்தில் உள்ள நாச்சியார் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்றார். அப்போது மலை படி ஏறும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் எனக் கூறப்படுகிறது.
ஏற்கனவே அவருக்கு இருதய கோளாறு இருந்துள்ளது. இந்த நிலையில் அவர் கோவிலுக்கு தரிசனம் சென்ற நிலையில் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று இரங்கல் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தமிழ்த் திரையுலகின் முன்னணி படத்தயாரிப்பு நிறுவனமான லட்சுமி மூவீ மேக்கர்ஸ்-இன் அதிபர்களுள் ஒருவரான திரு.கே.முரளிதரன் அவர்கள் உயிரிழந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமடைந்தேன்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் திரையுலக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:CM MK Stalin, Kollywood