Home / News / entertainment /

Suriya 41: சூர்யாவுக்கு ஜோடியான 18 வயது இளம் நடிகை!

Suriya 41: சூர்யாவுக்கு ஜோடியான 18 வயது இளம் நடிகை!

கீர்த்தி ஷெட்டி - சூர்யா

கீர்த்தி ஷெட்டி - சூர்யா

சூர்யா - பாலா படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் கன்னியகுமாரியில் தொடங்கியிருக்கிறது.

இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டி நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகே சூர்யா என்ற நடிகர் தனித்தன்மையுடன் வெளிப்பட ஆரம்பித்தார். இதையடுத்து பாலாவின் பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். பின்னர் பல முன்னணி இயக்குநர்களின் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவானார் சூர்யா.

பாலாவை பொறுத்தவரை அவன் இவன், தாரை தப்பட்டை என்று அடுத்தடுத்து சுமாரான படங்கள் தந்து ஜோதிகாவை வைத்து நாச்சியார் படத்தை இயக்கி, தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஆனால் அவருக்கு அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான வர்மா பெரும் சறுக்கலாக அமைந்தது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் அறிமுகமான அந்தப் படத்தை தயாரித்தவர்கள் மொத்தமாக பாலாவின் இயக்கத்தை நிராகரித்து, அதே கதையை வேறு இயக்குனரை வைத்து படமாக்கி ஆதித்ய வர்மாவாக அதை வெளியிட்டனர்.

விஜய்யை விட நான் பெரிய நடிகன் இல்லை - வியக்க வைத்த கே.ஜி.எஃப் 2 யாஷ்!

இதனால் பாலா மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மீண்டும் பழைய பாலாவாக திரும்பி வருவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த வேளையில், 18 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவர் சூர்யாவுடன் இணையும் அறிவிப்பு வெளியானது. சூர்யா ஏற்கனவே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கும் நிலையில், பாலாவின் படம் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்நிலையில் சூர்யாவின் 41-வது படத்தை பாலா இயக்குவதாக இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்படி வாடிவாசலுக்கு முன்பே பாலா - சூர்யா படம் உருவாவது உறுதியாகியிருக்கிறது. இன்று இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் கன்னியகுமாரியில் தொடங்கியிருக்கிறது.

377

Dune Oscar 2022: 6 ஆஸ்கர் விருதுகளை அள்ளிய ட்யூன்!

ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக 18 வயதேயான நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். உப்பென்னா, ஷ்யாம் சிங்கா ராய் உள்ளிட்ட சில தெலுங்கு படங்களில் நடித்துள்ள கீர்த்தி ஷெட்டி, லிங்குசாமி இயக்கி வரும் ‘தி வாரியர்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி ஹீரோவாக நடிக்கிறார். இதையடுத்து தமிழில் தனது இரண்டாவது படத்திலேயே பிரபலமான இயக்குநர் மற்றும் முன்னணி நடிகருடன் வேலை செய்யும் வாய்ப்பு கீர்த்தி ஷெட்டிக்கு கிடைத்துள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Tags:Actor Suriya, Director bala