PREVNEXT
ஹோம் / நியூஸ் / பொழுதுபோக்கு /

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் லுக்!

மார்க் ஆண்டனி படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் லுக்!

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி

மார்க் ஆண்டனி படத்தில் ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா தோற்றம் வெளியீடு

மார்க் ஆண்டனி திரைப்படத்தில் இடம்பெறும் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றத்தை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கான படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. அந்த திரைப்படத்தில் இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, ஜாக்கி பாண்டியன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

குறிப்பாக இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா ஆகியோருக்கு இரண்டு விதமான தோற்றங்கள் உள்ளன. இதனால் அவர்களின் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஷாலின் மார்க் ஆண்டனி படத்தின் தோற்றத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிட்டனர்.  இதைத்தொடர்ந்து இன்று மார்க் ஆண்டனி படத்தில் இடம்பெறும் எஸ்.ஜே.சூர்யாவின் தோற்றத்தை வெளியிட்டுள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வாய்ப்பு கொடுத்ததற்காக சம்பளம் வாங்காமல் நடித்துக் கொடுத்த ரஜினி!

அதில் இடம்பெற்றுள்ள அவரின் கதாபாத்திர வடிவமைப்பு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. விஷால் - எஸ்.ஜே சூர்யா - ஆதி ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதற்கான படப்பிடிப்பு 40 நாட்கள் முடிவடைந்துள்ளன. இன்னும் 80 நாள் படப்பிடிப்பு மீதம் இருக்கிறது. அதை முடித்து அடுத்த ஆண்டு தொடக்கத்தில் படத்தை வெளியிட தயாரிப்பாளர் வினோத் குமார் திட்டமிட்டு இருக்கிறார்.

Tags:Tamil Cinema

சிறந்த கதைகள்