PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / அஜித்தின் 'ஏகே 62' படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன்? - இதுதான் காரணமா?

அஜித்தின் 'ஏகே 62' படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன்? - இதுதான் காரணமா?

விஷ்ணுவர்தன் அல்லது வேறு ஒரு பெரிய இயக்குநர் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

அஜித் குமார் - விக்னேஷ் சிவன்

நடிகர் அஜித் குமார் துணிவு படம் கடந்த 11 ஆம் தேதி வெளியாகி வசூல் ரீதியில் வெற்றிப் படமாக அமைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஏகே 62 படத்தில் அஜித் நடிக்கவிருப்பதாகவும் லைக்கா புரொடக்சன்ஸ் தயாரிக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருந்தார்.

இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்கவிருப்பதாகவும் சந்தானம் இந்தப் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவிருப்பதாகவும் நாளுக்கு நாள் வெவ்வேறு தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தன. கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு அஜித் - சந்தானம் காம்போ இணையவிருப்பதால் அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் இருந்தனர்.

மகாராணி போல் இருக்கும் ப்ரியா வாரியர்.. லேட்டஸ்ட் படங்கள்

இந்த நிலையில் தயாரிப்பு தரப்புக்கு இந்தப் படத்தின் கதை பிடிக்காததால் விக்னேஷ் சிவன் விலகியதாகவும், விஷ்ணுவர்தன் அல்லது வேறு ஒரு பெரிய இயக்குநர் அந்தப் படத்தை இயக்கவிருக்கிறார் என்றும் தகவல்  பரவிவருகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:Actor Ajith

முக்கிய செய்திகள்