PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / மொத்தம் 67 இருக்கே.! விஜய் படத்துக்கு இப்படி ஒரு குறியீடா.? அடடே போட வைத்த தயாரிப்பு நிறுவனம்!

மொத்தம் 67 இருக்கே.! விஜய் படத்துக்கு இப்படி ஒரு குறியீடா.? அடடே போட வைத்த தயாரிப்பு நிறுவனம்!

இன்று மாலை 6.07-க்கு முக்கிய அப்டேட் என செவன் ஸ்கிரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டது தான் தற்போது வைரலாகி வருகிறது

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தங்களது அடுத்தப் படம் குறித்த அறிவிப்பை 67 புள்ளிகளின் மூலம் சூசகமாக தெரிவித்துள்ளது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ். இப்படியெல்லாம் ஒரு குறியீடா என ரசிகர்கள் ஆச்சரியம் தெரிவித்து வருகின்றனர்

நடிகர் விஜய்யின் மாஸ்டர் படத்தை எக்ஸ்பி ஃபிலிம் கிரியேட்டர்ஸுடன் இணைந்து லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்திருந்தது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்த இந்தப் படத்தில் விஜக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருந்தார். இவர்களுடன் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், ஷாந்தனு பாக்யராஜ் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். 2021-ல் மாஸ்டர் படம் வெளியாகி கொரோனா தொற்றுநோயால் துவண்டு கிடந்த தமிழ் சினிமாவை மீண்டும் உயிர் பெறச் செய்தது.

அதன் பிறகு கமல் ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கினார் லோகேஷ் கனகராஜ். படம் அனைத்துத் தரப்பினரிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, இயக்குநரின் மார்க்கெட்டையும் உச்சத்தில் கொண்டு சேர்த்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் விஜய் - லோகேஷ் இணைவதாக செய்திகள் வெளியாகின. இதனை இயக்குநரும் பல இடங்களில் உறுதிப்படுத்தினார்.

விஜய்யின் 67-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடிப்பதாகவும் கூறப்பட்டது, இதற்கிடையே தளபதி 67 படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில் இன்று மாலை 6.07-க்கு முக்கிய அப்டேட் என செவன் ஸ்கிரீன் நிறுவனம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது. அதில் 67 புள்ளிகளும் இடம்பெற்றுள்ளன.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் ட்வீட்

நடிகை ஸ்ரேயாவின் கவர்ச்சி படங்கள்..!

தாங்கள் விஜய்யின் தளபதி 67 படத்தை தயாரிப்பதை தான் இப்படி குறியீடுகள் மூலம் அறிவித்திருப்பதாக உற்சாகமடைந்துள்ளனர் ரசிகர்கள்.

377

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actor Thalapathy Vijay

முக்கிய செய்திகள்