PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / மீண்டும் தள்ளிப் போன சமந்தா படம்... ரசிகர்கள் அதிர்ச்சி

மீண்டும் தள்ளிப் போன சமந்தா படம்... ரசிகர்கள் அதிர்ச்சி

சாகுந்தலம் படத்தின் திரையரங்கு வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

சமந்தா

சமந்தா

சமந்தா நடித்துள்ள ‘சாகுந்தலம்’ திரைப்படம் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக தயாராகி வருவது அனைவருக்கும் தெரிந்ததே. பான்-இந்தியத் திரைப்படமாக 3டியில் தயாரிக்கப்பட்ட இந்தத் திரைப்படம், நாடக ஆசிரியரான காளிதாசரின் நாடக தழுவலாகும்.

குணா டீம் ஒர்க்ஸின் கீழ் நீலிமா குணா தயாரித்து, ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் விநியோகம் செய்யும் சாகுந்தலம் படத்தில் சமந்தா டைட்டில் ரோலில் நடிக்கிறார். இதில் தேவ் மோகன் மன்னர் துஷ்யந்தாவாக நடிக்கிறார், அல்லு அர்ஜுனின் மகள் அல்லு அர்ஹா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் முதலில் நவம்பர் 2022-ல் வெளியாக திட்டமிடப்பட்டது, இருப்பினும் 3D வேலைகள் காரணமாக பிப்ரவரி 17, 2023-க்கு தள்ளிப்போனது.

பாஸி லுக்கில் மாளவிகா மோகனன்.. வைரல் போட்டோஸ்

தற்போது, சாகுந்தலம் படத்தின் திரையரங்கு வெளியீடு மீண்டும் ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இது குறித்து தயாரிப்பு தரப்பு, "பிப்ரவரி 17-ஆம் தேதி சாகுந்தலத்தை எங்களால் வெளியிட முடியாது என்பதை அன்பான பார்வையாளர்களுக்கு வருத்தத்துடன் தெரிவிக்கிறோம். புதிய வெளியீட்டுத் தேதியை நாங்கள் பின்னர் அறிவிப்போம். உங்களின் தொடர் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி” எனத் தெரிவித்துள்ளது.

சாகுந்தலத்தின் கதை, மகாபாரதத்தைச் சேர்ந்த சகுந்தலா மற்றும் துஷ்யந்த் மன்னரின் காவியக் காதலை மையப்படுத்தி இயக்கப்பட்டுள்ளது. சச்சின் கெடேகர், கபீர் பேடி, டாக்டர் எம் மோகன் பாபு, பிரகாஷ் ராஜ், மதுபாலா, கவுதமி, அதிதி பாலன் உள்ளிட்டோர் இதில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actress Samantha

முக்கிய செய்திகள்