PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / காத்திருக்கும் 3 இயக்குநர்கள்.. நேரில் சந்தித்த ஜெய்பீம் ஞானவேல்.. ரஜினியின் முடிவு என்ன?

காத்திருக்கும் 3 இயக்குநர்கள்.. நேரில் சந்தித்த ஜெய்பீம் ஞானவேல்.. ரஜினியின் முடிவு என்ன?

ரஜினிகாந்த் தனது அடுத்த படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் அவர் இறங்கியுள்ளார்.

TJ ஞானவேல் - ரஜினிகாந்த்

TJ ஞானவேல் - ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அடுத்த படத்தின் கதையை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளார். அவரின் அடுத்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்குகிறார் என கடந்த பல மாதங்களாக செய்திகள் பரவி வந்தன.

ஆனால் நடிகர் ரஜினிகாந்த் ஜெயிலர் திரைப்படத்தின் 70% படபிடிப்பு முடிந்த பிறகு தன்னுடைய அடுத்த படத்தை இறுதி செய்ய திட்டமிட்டு இருந்தார். அதற்காக கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி, சிபி சக்கரவர்த்தி, லோகேஷ் கனகராஜ், எச்.வினோத், TJ.ஞானவேல் உள்ளிட்ட பலரிடம் கதை கேட்டுள்ளார். அதில் எந்த கதையை தேர்வு செய்வது என்பதை ஜெயிலர் இறுதி கட்டத்தை எட்டும்பொழுது முடிவு செய்யாலாம் என முடிவெடுத்தார்.

அந்த வகையில் தற்போது ஜெயிலர் திரைப்படத்தின் 70% காட்சிகளை ரஜினிகாந்த் முடித்து கொடுத்துவிட்டார். இந்த நிலையில் தனது அடுத்த படத்திற்கான கதையை இறுதி செய்யும் பணியில் அவர் இறங்கியுள்ளார். அதில் சமீபத்தில் ஜெய் பீம் படத்தின் இயக்குநர் TJ.ஞானவேல் மற்றும் மேலும் இரண்டு இயக்குநர்கள் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளனர். அவர்களில் ரஜினிகாந்த் யாரை இறுதி செய்ய போகிறார் என்பது விரைவில் தெரியவரும்.

 

Tags:Rajinikanth

முக்கிய செய்திகள்