PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / தொடரும் திரையுலக உயிரிழப்புகள்.. ரஜினிகாந்த் நடித்த காளி பட தயாரிப்பாளர் பாபுஜி மரணம்!

தொடரும் திரையுலக உயிரிழப்புகள்.. ரஜினிகாந்த் நடித்த காளி பட தயாரிப்பாளர் பாபுஜி மரணம்!

ரஜினிகாந்தின் காளி, கர்ஜனை படங்களை தயாரித்த பாபுஜி காலமானார். 

பாபுஜி

பாபுஜி

ரஜினிகாந்த் நடித்த காளி, கர்ஜனை திரைப்படங்களை தயாரித்த பாபுஜி காலமானார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க தயாரிப்பாளராக வலம் வந்தவர் பாபுஜி. இவர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காளி மற்றும் கர்ஜனை படங்களை தயாரித்தார். அதேபோல் கின்னஸ் சாதனைக்காக தமிழில் தயாரான சுயம்வரம் திரைப்படத்தையும் தயாரித்தார்.

அந்த திரைப்படம் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்ட படம் என்ற கின்னஸ் சாதனையை நிகழ்த்தியது. அதில் பிரபு தேவா, பிரபு, கார்த்தி உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக இருந்த பாபுஜி, கில்டு அமைப்பின் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.

நினைவாற்றல் குறைந்து அவதிப்படும் நடிகை பானுப்பிரியா.!

சினிமா தயாரிப்பு தவிர, திரைப்பட விநியோகம் மற்றும் பைனான்ஸ் ஆகிய துறைகளிலும் பாபுஜி செயல்பட்டு வந்தார். 79 வயதாகும் இவர் கடந்த சில ஆண்டுகளாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் வயது மூப்பின் காரணமாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பாபுஜி காலமானார். அவருக்கு திரைப்பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Rajinikanth

முக்கிய செய்திகள்