PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / WATCH - சிம்புவின் பிறந்த நாள்.. நள்ளிரவில் வெளியாகும் 'பத்து தல' படத்தின் பாடல்!

WATCH - சிம்புவின் பிறந்த நாள்.. நள்ளிரவில் வெளியாகும் 'பத்து தல' படத்தின் பாடல்!

படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒபேலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார்.

சிம்பு

சிம்பு

நடிகர் சிம்புவின் பிறந்த நாளையொட்டி, அவர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் முதல் பாடல் நள்ளிரவு வெளியாக உள்ளது. இந்தப் பாடலை ஏ. ஆர். ரஹ்மான் பாடியிருப்பதால் அதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் முதல் பாடலில் கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிம்பு மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, செக்கச் சிவந்த வானம், வெந்து தணிந்தது காடு ஆகிய படங்களின் பாடல்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் 5-ஆவது முறையாக இந்த கூட்டணி பத்து தல படத்தில் இணைந்து இருக்கிறது.

சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் மிகப்பெரும் கம்பேக் கொடுத்தது. இதன் பின்னர் வெந்து வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தது. இதன் தொடர்ச்சியாக வாரிசு படத்தில் தீ தளபதி என்ற பாடலை சிம்பு பாடியிருந்தார். இதன் காரணமாக சிம்பு தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில் அவரது பத்து தல திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதையடுத்து படத்தில் இருந்து முதல் பாடலாக, நம்ம சத்தம் என்ற பாடல் சிம்புவின் பிறந்த நாளையொட்டி இன்று நள்ளிரவு 12.06-க்கு வெளியாகிறது. இந்தப் பாடலை ஏ ஆர் ரஹ்மான் பாடியுள்ளார்.

தற்போது இந்த பாடலின் கிளிம்ஸ்ம் வீடியோ வெளியாகி எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படத்தில் கவுதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒபேலி கிருஷ்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஸ்டூடியோ க்ரீன் சார்பாக கே.இ. ஞானவேல் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்காக பத்து தல படம் உருவாக்கப்பட்டு வருகிறது

Tags:AR Rahman, Simbu

முக்கிய செய்திகள்