PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ‘தளபதி 67 படத்தில் இடம்பெறவில்லை…’ - பான் இந்தியா நடிகர் தகவல்

‘தளபதி 67 படத்தில் இடம்பெறவில்லை…’ - பான் இந்தியா நடிகர் தகவல்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது.

விஜய் - லோகேஷ் கனகராஜ்

விஜய் - லோகேஷ் கனகராஜ்

தளபதி 67 படத்தில் இடம் பெறவில்லை என்று பான் இந்தியா நடிகர் ஒருவர் கூறியுள்ளார். அவர் படத்தில் இடம் பெறுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த தகவலை அவர் தெரிவித்திருக்கிறார். விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்த தளபதி 67 படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். பீஸ்ட் படத்திற்கு ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்த படத்தில் பணியாற்றுகிறார்.

சண்டைப் பயிற்சியை அன்பறிவு கவனிக்க, ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை மேற்கொள்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த 2ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று படத்தில் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் கலைஞர் குறித்த அறிவிப்பு வெளியானது. நடிகர்கள் குறித்த அறிவிப்பு 2,3 நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில், அர்ஜுன், சஞ்சய் தத், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடிப்பார்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதே போன்று சமீபத்தில் இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட்டான காந்தாரா படத்தின் நாயகன் ரிஷப் ஷெட்டி தளபதி 67 படத்தில் நடிப்பார் என்று பரவலாக பேசப்பட்டது. இந்த நிலையில் தான் படத்தில் இடம்பெறவில்லை என்று ரிஷப் ஷெட்டி கூறியுள்ளார். இதனால் விஜய் ரசிகர்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கமலின் விக்ரம் திரைப்படம் மிகப்பெரும் வெற்றியை பெற்ற நிலையில், தளபதி 67 படத்தின் மீதான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த படத்தை ஆயுத பூஜையையொட்டி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags:Actor Vijay

முக்கிய செய்திகள்