லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் இணையும் நாளுக்காக காத்திருக்கிறேன் என நடிகர் விஜய் தேவரகொண்டா கூறியுள்ளார்.
பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் தேவரகொண்டா, நடிகை அனன்யா பாண்டே, விநியோகஸ்தர் ஆர்.கே. சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதில் பேசிய விஜய் தேவரகொண்டா, லைகர் மரண மாஸ் திரைப்படமாக இருக்கும் என கூறினார். அவரிடம் நியூஸ் 18 தொலைக்காட்சி சார்பில் நோட்டா திரைப்படத்திற்கு பிறகு நேரடி தமிழ் திரைப்படங்கள் நடிக்காததற்கான காரணம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த விஜய் தேவரகொண்டா, தமிழில் லோகேஷ் கனகராஜ், வெற்றிமாறன், பா.ரஞ்சித் ஆகியோருடன் இணைந்து பணியாற்ற விருப்பம். அவர்களிடம் நான் பேசி உள்ளேன் என தெரிவித்தார்.
மேலும் அவர்களிடம் அழைப்பு வந்தால் நிச்சயம் நடிக்க தயாராக இருக்கிறேன். அதிலும் லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் இணைய காத்திருக்கிறேன். அது நடக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அந்த நாளுக்காக காத்திருப்பதாகவும் விஜய் தேவரகொண்டா கூறினார். அதுவரை தான் நடிக்கும் திரைப்படங்களை தமிழில் டப் செய்து வெளியிடப்படும் எனவும் கூறினார்.
3 ஆண்டுகளுக்கு பின்பு வெளியான சூர்யா - சிறுத்தை சிவா படத்தின் முக்கிய அப்டேட்!
பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள லைகர் திரைப்படம் வரும் 25ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Vijay devarakonda