தெலுங்கு திரையுலகில் இயக்குனராக அறிமுகமாகி தமிழ், இந்தி மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை கொடுத்தவர் கே.விஸ்வநாத். இவர் இந்திய சினிமாவின் பல முன்னணி நட்சத்திரங்களை வைத்து திரைப்படங்களை எடுத்து வெற்றி அடைந்தார்.
இவர் முதன்முதலாக 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். அந்த திரைப்படம் பெரும் வெற்றி அடைந்ததால் தெலுங்கு துறையில் கவனிக்கத்தக்க இயக்குனராக வளர்ந்தார் கே.விஸ்வநாதன். ஏராளமான படங்களை இயக்கி சாதனைபடைத்துள்ளார்.
விஸ்வநாத் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய திரைப்படங்கள் இந்தியாவின் மிகச்சிறந்த திரைப்படங்களாக அறியப்படுகின்றன. இதில் சலங்கை ஒலி, சிற்பிக்குள் முத்து படங்களில் கமல்ஹாசன் நாயகனாக நடித்தார். மூன்று மொழிகளில் பல வெற்றி திரைப்படங்களை இயக்கியது மட்டுமல்லாமல் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். குறிப்பாக கமல்ஹாசன் உடன் குருதிப்புனல், உத்தமவில்லன், அஜித்தின் முகவரி, விஜய்யின் புதிய கீதை, தனுஷ் நடித்த யாரடி நீ மோகினி உள்ளிட்ட திரைப்படங்களில் கே.விஸ்வநாத் நடித்திருக்கிறார்.
கே.விஸ்வநாத் ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேபோல் இந்திய அரசு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Death, Director, Tollywood