Home / News / entertainment /

கே.ஜி.எஃப்.2 இயக்குனர் – பாகுபலி பிரபாஸ் இணையும் சலார் படத்தின் அப்டேட்…

கே.ஜி.எஃப்.2 இயக்குனர் – பாகுபலி பிரபாஸ் இணையும் சலார் படத்தின் அப்டேட்…

பிரபாஸ் - பிரசாந்த் நீல்

பிரபாஸ் - பிரசாந்த் நீல்

கே.ஜி.எஃப். 2 படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் சலார் படத்தை தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

கே.ஜி.எஃப். 2 படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி பிரபாஸ் இணையும் சலார் படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது.

கே.ஜி.எஃப். 2 படத்தின் பிரமாண்ட வெற்றி அதன் இயக்குனர் பிரசாந்த் நீல் மீது ஒட்டுமொத்த இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரசாந்த் நீல் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

தமிழ் சினிமாவுக்கு கமல்ஹாசன் வந்த கதை… தென்னகத்து திரைவானிற்கு ஏவிஎம் அளித்த குழந்தை நட்சத்திரம்

கே.ஜி.எஃப். 2 படத்தை தயாரித்த ஹோம்பலே நிறுவனம் சலார் படத்தை தயாரிக்கிறது. ரவி பஸ்ரூர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

நீண்ட நாட்களாக சலார் படத்தின் அப்டேட் எப்போது வரும் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டிருந்தனர். இந்த நிலையில், இன்று இப்படத்தின் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 ஆம் தேதி மதியம் 12.58-க்கு படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாக உள்ளது. கேஜிஎப் 2 திரைப்படம் மிகப்பெரும் ஆக்சன் மற்றும் மாஸ்ஸான கமர்ஷியல் படமாக வெளிவந்து ரசிகர்களை கவர்ந்தது.

‘லோகேஷ் கனகராஜ் யூனிவர்சில் இணையும் நாளுக்காக காத்திருக்கிறேன்’ - விஜய் தேவரகொண்டா

அந்த படத்தின் இயக்குனர் மற்றும் பாகுபலி ஹீரோ பிரபாஸ் இணைந்திருப்பதால் சலார் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகம் காணப்படுகிறது. ஏற்கனவே சலார் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந் நிலையில் நாளை மறுதினம் படத்தின் அப்டேட்டை ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளார்கள்.

Tags:Actor prabhas