PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / மோகன்லால் கேட்டும் மறுத்த கமல்ஹாசன், 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி - பின்னணி என்ன ?

மோகன்லால் கேட்டும் மறுத்த கமல்ஹாசன், 'காந்தாரா' ரிஷப் ஷெட்டி - பின்னணி என்ன ?

தமிழில் கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன், விஜய்யின் ஜில்லா படங்களில் எந்த ஈகோவும் பார்க்காமல் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்.

கமல்ஹாசன் - மோகன்லால் - ரிஷப் ஷெட்டி

கமல்ஹாசன் - மோகன்லால் - ரிஷப் ஷெட்டி

சமீப காலமாக இந்திய திரைப்படங்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் வண்ணம் பான் இந்திய படங்களாக உருவாவதால், அந்தந்த மொழிகளில் பிரபலமான நடிகர்களை ஒப்பந்தம் செய்துவருகிறார்கள்.

சமீபத்தில் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தில் மலையாள திரையுலகிலிருந்து மோகன்லால், தெலுங்கிலிருந்து சுனில், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், ஹந்தியிலிருந்து ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்டோர் இணைந்தனர். மற்றொரு பக்கம்பிரம்மாண்டமாக தயாராகும் தளபதி 67 படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத் போன்ற இந்திய பிரபலங்கள் நடித்துவருகிறார்கள்.

இந்த நிலையில் தற்போது மோகன்லால் தற்போது ஜல்லிக்கட்டு பட இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் மலைக்கோட்டை வாலிபன் என்ற படத்தில் நடித்துவருகிறார். லிஜோ ஜோஸ் பெல்லிசேரி தற்போது மம்மூட்டியை வைத்து இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிப்பதற்காக நடிகர் கமல்ஹாசனிடமும், காந்தாரா ரிஷப் ஷெட்டியிடமும் மோகன்லால் பேசியிருக்கிறார். ஆனால் கமல்ஹாசன் தனக்கு இந்தியன் 2 படப்பிடிப்பு இருப்பதாக கூறி மறுத்திருக்கிறார்.

காந்தாரா பட நடிகர் ரிஷப் ஷெட்டி தனக்கு அடுத்ததாக கன்னட படமொன்றில் நடிக்கவிருப்பதாக கூறி மறுத்திருக்கிறார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன், விஜய்யின் ஜில்லா படங்களில் எந்த ஈகோவும் பார்க்காமல் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார். இதனால் மோகன்லால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Tags:Kamal Haasan, Mohanlal

முக்கிய செய்திகள்