
- News18 Tamil
- Last Updated: May 24, 2020, 10:58 IST
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி நேற்று கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டதையடுத்து சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான விமர்சனங்கள் எழுந்து வந்தன.
அப்போது இயக்குநர் ரஞ்சித், விடுதலை சுவையறியா ஆடுகளுக்கு பசி தீர்க்கும் புற்களே அமிர்தம் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
ஆடுகள்:தலித் மக்கள் புற்கள்: கட்சிகளின் முழக்கங்கள் மீதான நம்பிக்கைகள்.
— pa.ranjith (@beemji) May 23, 2020
இயக்குநர் ரஞ்சித்தின் ட்வீட், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவனை விமர்சித்ததாக பின்னூட்டங்கள் இடப்பட்டன. அதை மறுத்த இயக்குநர் ரஞ்சித், இந்த கருத்தை, விசிக தலைவர் திருமாவளவனின் மீது மடை மாற்றாமல், அரசியல் கட்சிகள் தலித் மக்களை எப்படிக் கையாளுகிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும் என்று மீண்டும் பதிவிட்டுள்ளார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் \1\6இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Follow News18Tamil.com @ Facebook, Twitter, Instagram, Sharechat, Helo, WhatsApp, Telegram, TikTok, YouTube