'நட்சத்திரம் நகர்கிறது' படத்துக்கு பிறகு இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படத்தை இயக்கி வருகிறார். ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்தப் படம் கேஜிஎஃப்-ல் நடைபெற்ற உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வருகிறது.
இந்தப் படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர். இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துவருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் படங்களுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துவந்த நிலையில் மனக் கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர். இதன் காரணமாக நட்சத்திரம் நகர்கிறது படத்துக்கு தென்மா இசையமைத்திருந்தார்.
தங்கலான் படத்துக்காக முதன்முறையாக ஜி.வி.பிரகாஷ் குமாருடன் பா.ரஞ்சித் இணைந்துள்ளார். ஏற்கனவே தெய்வத்திருமகள், தாண்டவம் போன்ற விக்ரமின் படங்களுக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
இந்த நிலையில் 'தங்கலான்' குறித்து ஜி.வி.பிரகாஷ் குமார் முக்கிய அப்டேட்டை வழங்கியுள்ளார். அதில், ''தங்கலான் படத்தின் இசை உருவாகும் விதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறேன். சர்வதேச பழங்குடியின இசைக் கலவையுடன் இந்தப் பாடல்களை உருவாக்கியிருக்கிறேன். இதுவரை நான் முயற்சிக்காதது. மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து தங்கலான் ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகிவருகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actor Vikram, G.V.Prakash, Pa. ranjith