PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / சூர்யா, அஜித், விக்ரமுக்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்

சூர்யா, அஜித், விக்ரமுக்கு குரல் கொடுத்த பிரபல டப்பிங் கலைஞர் காலமானார்! - திரை பிரபலங்கள் இரங்கல்

விக்ரமின் 'அபரிசிடுடு' படத்திற்குப் பிறகு மூர்த்தி தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்தார்.

ஸ்ரீநிவாச மூர்த்தியுடன் சூர்யா

ஸ்ரீநிவாச மூர்த்தியுடன் சூர்யா

பிரபல டப்பிங் கலைஞர் ஸ்ரீநிவாச மூர்த்தி இன்று காலமானார். இந்தியாவில் உள்ள பிரபலமான டப்பிங் கலைஞர்களில் இவரும் ஒருவராக திகழ்ந்தார். சூர்யா மற்றும் பல பிரபல நடிகர்களுக்கு தெலுங்கில் டப்பிங் பேசி புகழ் பெற்றார் மூர்த்தி.

1990-களில் டப்பிங் பணியை தொடங்கிய அவருக்கு அர்ஜுன் நடித்த 'ஓகே ஒக்கடு' படம் திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா தவிர விக்ரம், அஜித் உள்ளிட்டோருக்கும் தெலுங்கில் குரல் கொடுத்திருக்கிறார் மூர்த்தி. மலையாளத்தில் இருந்து தெலுங்கிற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட திரைப்படங்களில் மோகன் லால் உள்ளிட்டோருக்கு டப்பிங் பேசியிருக்கிறார் ஸ்ரீநிவாச மூர்த்தி. அதோடு கன்னட நடிகர் உபேந்திராவுக்கும் குரல் கொடுத்திருக்கிறார்.

விக்ரமின் 'அபரிசிடுடு' படத்திற்குப் பிறகு மூர்த்தி தெலுங்கு திரையுலகில் பிரபலமடைந்தார். ஹீரோவுக்கு மூன்று வித்தியாசங்களில் டப்பிங் செய்வது மிகவும் கடினமான பணியாக இருந்தது. ஆனால் அவர் அதை எளிதாக செய்தார். சூர்யாவின் ‘சிங்கம்’ படமும் அவருக்குப் புகழைப் பெற்றுத் தந்தது. அஜித்துக்காக ‘விஸ்வாசம்’ மற்றும் சமீபமாக வெளியான மற்ற படங்களுக்கும் டப்பிங் பேசியுள்ளார். மாதவனின் 'ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்' அவரது கடைசி கால படங்களில் ஒன்றாகும்.

குணச்சித்திர கலைஞர்களுக்காகவும் மூர்த்தியை அணுகினர் படக்குழுவினர். அந்த வகையில் 'ஆலா வைகுந்தபுரமுலோ’ உள்ளிட்ட படங்களில் ஜெயராமுக்கு குரல் கொடுத்தார். மூர்த்தியின் தந்தை ஏவிஎன் மூர்த்தி பின்னணிப் பாடகராக இருந்தார். இதற்கிடையே ஸ்ரீநிவாச மூர்த்தியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் நடிகர் சூர்யா.

பீரியட்ஸ் குறித்து ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

இது குறித்த ட்விட்டர் பதிவில், “இது மிகப்பெரிய தனிப்பட்ட இழப்பு! ஸ்ரீனிவாசமூர்த்தியின் குரல் மற்றும் உணர்வுகள் தெலுங்கில் என் நடிப்புக்கு உயிர் கொடுத்தது. உங்களை மிஸ் செய்வேன் சார்! விரைவில் சென்று விட்டீர்கள்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

377

Tags:Actor Suriya

முக்கிய செய்திகள்