சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் ஆதி எழுதி, இயக்கி, நடித்து, இசையமைத்த சிவகுமாரின் சபதம் படத்தின் ஓடிடி உரிமையை டிஸ்னி+ ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது.
புதுப்படங்களை நேரடியாக வெளியிடுவதில் மட்டுமின்றி, திரையரங்குகளில் வெளியான படங்களை வாங்கி வெளியிடவும் ஓடிடி நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. விஷாலின் ஓடாத ஆக்ஷன் படத்தையும் ஒரு ஓடிடி வாங்கி வெளியிட்டுள்ளது. ஹிப் ஹாப் ஆதியின் சிவகுமாரின் சபதம் படத்தையும் டிஸ்னி + ஹாட் ஸ்டார் வாங்கியுள்ளது.
ஹிப் ஹாப் ஆதியை வைத்து அன்பறிவு படத்தை தயாரித்து வந்த சத்யஜோதி பிலிம்ஸ், அந்தப் படத்துடன் சேர்த்து சிவகுமாரின் சபதம் படத்தையும் தயாரித்தது. அன்பறிவு படத்தில் ஹிப் ஹாப் ஆதி நடிப்பு, இசையுடன் நிறுத்திக் கொண்டார். சிவகுமாரின் சபதத்தில் அவர்தான் ஆல் இன் ஆல். எழுத்து முதல் இயக்கம்வரை எல்லாம் அவரே. கொரோனா இரண்டாம் அலைக்குப் பின் திரையரங்கில் துணிச்சலாக வெளியான படங்களில் சிவகுமாரின் சபதமும் ஒன்று. படத்தின் கதையும், காட்சிகளும் சுமார் என்பதால் படம் ஓடவில்லை. தற்போது டிஸ்னி + ஹாட் ஸ்டாருக்கு படத்தை தள்ளிவிட்டிருக்கிறார்கள். டிசம்பர் 3 ஆம் தேதி டிஸ்னி + ஹாட் ஸ்டார் படத்தை வெளியிடுகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் இவ்விரு படங்களுடன் மூன்றாவது ஒரு படத்தையும் ஹிப் ஹாப் ஆதியை வைத்து தயாரிக்கிறது. தனுஷின் மாறன் படமும் இவர்கள் தயாரிப்பே. மாறனை நேரடியாக ஓடிடியில் வெளியிட சத்யஜோதி பிலிம்ஸ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Hip hop Tamizha