சுமார் 18 வருடங்களுக்கு பிறகு பாலாவின் இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். பழைய பாலா அதே வீரியத்துடன் இந்தப் படத்தில் திரும்பி வருவார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் சென்ற வாரம் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து மதுரையில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர். சுமார் நாற்பது தினங்களுக்கு இந்த ஷெட்யூல்டை திட்டமிடப்பட்டுள்ளனர். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும், அதிலொன்று காது கேட்காத, வாய் பேச முடியாத கதாபாத்திரம் என ஒரு வதந்தி சுற்றி வருகிறது. நாம் விசாரித்த வரையில் சூர்யா இரண்டு வேடங்களில் நடிப்பதாக சொல்லப்படுவது வெறும் வதந்தி மட்டுமே.
கரணம் தப்பினால் மரணம் நிலையில் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்.. நடிகர் விஜய் மீது டிஜிபியிடம் புகார்
கலர்ஸ் தமிழில் புதிய கேம் ஷோ ஆரம்பம்… ஆங்கர் நம்ம வீஜே பாவனா தான்!
சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த வருடம் வெளியாகும் எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக பாலா படமும் மாறியிருக்கிறது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Actor Suriya, Director bala, Kollywood