PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ”உன் துணைக்கு நான்தான்..." - இளையராஜாவின் செயலால் நெகிழ்ந்த தனுஷ்!

”உன் துணைக்கு நான்தான்..." - இளையராஜாவின் செயலால் நெகிழ்ந்த தனுஷ்!

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். 

இளையராஜா, தனுஷ்

இளையராஜா, தனுஷ்

வெற்றிமாறனின் 'விடுதலை' பாடல் ப்ரோமோ வீடியோவில் “உன் துணைக்கு நான்தான்” என இளையராஜா கூற என்றென்றும் என தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆர்.எஸ். இன்ஃபோடெயின்மென்ட் எல்ரட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கும் படம் ‘விடுதலை’. இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தில் விஜய் சேதுபதி, சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களைத் தவிர பவானி ஸ்ரீ, பிரகாஷ்ராஜ், கெளதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

எழுத்தாளர் ஜெயமோகனின் சிறுகதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் சண்டைக் காட்சிகளை அமைத்து இருக்கிறார்.

குறைவான பட்ஜெட்டில் ஒரே பாகமாக துவங்கப்பட்ட இப்படம் கதையில் ஏற்பட்ட மாறுதல் காரணமாக இரண்டு பாகங்கள் கொண்ட படமாக மாறியுள்ளது. இந்தப் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

இந்த நிலையில் இந்தப் படத்தின் முதல் பாடலான உன்னோடு நடந்த என்ற பாடல் வருகிற 8 ஆம் தேதி வெளியாகிறது. சுகா எழுதியுள்ள இந்தப் பாடலை தனுஷ் மற்றும் அனன்யா பட் இணைந்து பாடியுள்ளனர். இளையராஜா இசையில் தனுஷ் முதன்முதலாக பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாடலின் இரண்டாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

அதில், உன் துணைக்கு நான் தான்... என் துணைக்கு நீ தான் என இளையராஜா முதலில் பாடிக்காட்ட அதனை தொடர்ந்து தனுஷ் பாடுகிறார். மீண்டும் உன் துணைக்கு நான் தான் என இளையராஜா தனுஷை பார்த்து கைநீட்டி பாட, கையெடுத்து கும்பிட்ட தனுஷ் எப்போதும்.. என்றென்றும் நீங்கதான் என்று நெகிழ்ச்சியுடன் கூறுகிறார்.

377

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actor Dhanush, Ilaiyaraja

முக்கிய செய்திகள்