PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ஷாங்காய் திரைப்பட விழாவுக்கு போகும் ஊர்வசியின் அப்பத்தா..!

ஷாங்காய் திரைப்பட விழாவுக்கு போகும் ஊர்வசியின் அப்பத்தா..!

நடிகர்களும், படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருப்பதாக இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

ஊர்வசி

ஊர்வசி

நடிகை ஊர்வசியின் 700-வது படம் ஷாங்காய் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்படுகிறது. 

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு திரைப்பட விழாவில் திரையிடப்படும் படங்களில் ஒன்றாக ஊர்வசி நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கிய ‘அப்பத்தா’ என்ற தமிழ் திரைப்படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளியாகவில்லை. பெற்றோர்களுக்கு தர வேண்டிய மரியாதையையும், அவர்களுடனான பிணைப்பையும் மையப்படுத்தி இப்படம் இயக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

மும்பையில் ஜனவரி 27-ம் தேதி பிலிம்ஸ் டிவிஷன் வளாகத்தில் ‘அப்பாத்தா’ திரைப்படம் திரையிடப்படும் என்று படத் தயாரிப்பாளர்கள் செய்திக் குறிப்பு வெளியிட்டிருந்தனர். திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் தனது திரைப்படம் திரையிடப்படுவது தனக்கு பெருமை அளிப்பதாகவும், அதோடு நடிகர்களும், படக்குழுவினரும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும் இயக்குனர் பிரியதர்ஷன் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குப் பேட்டியளித்த இயக்குநர், இப்படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியளிக்கிறது. நடிகை ஊர்வசியின் 700-வது படம் என்பதால், இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ‘அப்பத்தா’ படத்தின் கதைக்களம், தான் முன்பு முயற்சித்த மற்ற கதைகளிலிருந்து வேறுபட்டது என்றும் பார்வையாளர்களின் ரியாக்‌ஷனைப் பார்க்க மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.

பீரியட்ஸ் குறித்து ஓப்பனாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்..

பிரியதர்ஷன் இயக்கியுள்ள இப்படத்தின் கதையை ஹர்திக் கஜ்ஜர் எழுத, திரைக்கதையை பிரியதர்ஷன் மற்றும் தீப்தி கோவிந்தராஜன் ஆகியோர் அமைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actress urvashi

முக்கிய செய்திகள்