Home / News / entertainment /

திருமணம் நின்று போனதாக வதந்தி.. நடிகை பூர்ணாவின் பதில் இதுதான்!

திருமணம் நின்று போனதாக வதந்தி.. நடிகை பூர்ணாவின் பதில் இதுதான்!

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணா

நடிகை பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்திகள் பரவி வந்தன.

திருமணம் நின்று விட்டதாக சமூகவலைத்தளங்களில் பரவி வரும் வதந்திக்கு சூப்பரான ரிப்ளை கொடுத்து இருக்கிறார் நடிகை பூர்ணா.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை பூர்ணா. தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் சேர்க்கும் வகையில் முழு திறமையை வெளிப்படுத்தக் கூடியவர் . தமிழில் பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பின்பு கொடைக்கானல், வேலூர் மாவட்டம், ஆடுபுலி , அகண்டா, தலைவி, போன்ற படங்களில் நடித்தார். கொடி வீரன், சவரக்கத்தி போன்ற படங்களில் பூர்ணாவின் நடிப்பு பாராட்டுக்களை பெற்று இருந்தது.

பாரதி கண்ணம்மா வினுஷா இவ்வளவு அழகா!

மலையாளத்தில் த்ரிஷ்யம் 2 படத்தில் மிரட்டி இருந்தார். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சி மற்றும் வெப் தொடர்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு பூர்ணா தனது திருமணம் குறித்து அறிவித்து இருந்தார். ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த தொழிலதிபர் ஆஷிஃப் அலி என்பவரை கூடிய விரைவில் பூர்ணா கரம் பிடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின,. பூர்ணாவும் இன்ஸ்டாகிராமில் இதை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஐயோ பாவம்.. டான்ஸ் ஆட போன சுந்தரிக்கு கடைசியில் நடந்த அதிர்ச்சி!

பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்த நானும் ஆஷிஃப்பும், எங்களின் உறவை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறோம். உங்கள் வாழ்த்துக்களை எதிர்பார்க்கிறேன் என பூர்ணா கூறி இருந்தார். இதையடுத்து பூர்ணா - ஆஷிஃப் நிச்சயதார்த்தம் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. சில தினங்களூக்கு முன்பு தனது நிச்சயதார்த்த தருணத்தின் கேன்டிட் புகைப்படங்களையும் பூர்ணா இன்ஸ்டாவில் வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் பூர்ணாவின் திருமணம் நின்று விட்டதாக சமூகவலைத்தளத்தில் வதந்திகள் பரவி வந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தனது வருங்கால கணவருடன் பூர்ணா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ‘என்றுமே என்னவன்’ என்று பதிவிட்டுள்ளார். பூர்ணா - ஆஷிப் திருமண தேதி கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. திருமணத்திற்கு பிறகு பூர்ணா தொடர்ந்து நடிப்பாரா? என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

377

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actress Poorna, Kollywood, Tamil Cinema