PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ''பாகிஸ்தானையும், ஐஸ்எஸ்எஸ்-ம் நல்ல முறையில் காட்டுது... ’இந்தியன் பதான்' என்பதே சரி''- கங்கனா ரணாவத் கொடுத்த ரிவ்யூ

''பாகிஸ்தானையும், ஐஸ்எஸ்எஸ்-ம் நல்ல முறையில் காட்டுது... ’இந்தியன் பதான்' என்பதே சரி''- கங்கனா ரணாவத் கொடுத்த ரிவ்யூ

இந்தியாவின் முஸ்லீம்கள் மதச்சார்புடையவர்கள் ஆஃப்கானிஸ்தான் பதான்களை விட வித்தியாசமானவர்கள்.

ஷாருக்கான் - கங்கனா ரணாவத்

ஷாருக்கான் - கங்கனா ரணாவத்

நடிகர் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்தப் படம் ஒரே நாளில் உலக அளவில் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக பாலிவுட் திரைப்படங்கள் தோல்வியை சந்தித்துவரும் நிலையில் பதான் திரைப்படம் பாலிவுட்டை சரிவிலிருந்து மீட்கும் வகையில் இருக்கும் என திரை வர்த்தகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

படம் வெளியாவதற்கு முன் இப்படத்திலிருந்து வெளியான பேஷாராம் ரங் என்ற பாடலில் திபீகா படுகோன் காவி நிற பிகினி உடையணிந்திருப்பதாகவும் இது இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருப்பதாகவும் இந்து அமைப்பினரும், பாஜகவினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தப் படத்தை திரையிடக் கூடாது என குஜராத் மல்டிபிளக்ஸ் திரையரங்குகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின.

இதனையடுத்து பிரதமர் மோடி தனது உரையில் நாங்கள் இரவும் பகலும் கடுமையாக உழைக்கிறோம். நம்மில் சிலர் திரைப்படங்கள் பற்றி தேவையற்ற கருத்துகளை வெளியிடுகிறார்கள். இதனை தவிர்க்க வேண்டும் கூறியிருந்தார்.

இந்த நிலையில் படத்தின் வெற்றி சர்ச்சைகளுக்கு பதிலளிக்கும் விதமாக அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்த நிலையில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதான் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், ''பதான் திரைப்படம் வெறுப்பை தவிர்த்து அன்புக்கு கிடைத்த வெற்றி என அனைவரும் சொல்வதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அது யாருடைய அன்பு? யாருடைய வெறுப்பு? இதனை துல்லியமாக பேசலாம். டிக்கெட்டுகளை வாங்கி படத்தை வெற்றி பெறச் செய்வதவர்களின் அன்பு? ஆம், 80 சதவிகிதம் இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்புக்கு கிடைத்த வெற்றி.

மகாராணி போல் இருக்கும் ப்ரியா வாரியர்.. லேட்டஸ்ட் படங்கள்

ஆனால் பதான் திரைப்படம் எதிரி நாடான பாகிஸ்தானையும், ஐ.எஸ்.ஐ.எஸையும் நல்ல முறையில் காட்டுகிறது. வெறுப்பு மற்றும் தீர்மானங்களுக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் மனப்பான்மைதான் அதை சிறப்பாக்குகிறது. வெறுப்பையும், எதிரிகளின் அற்ப அரசியலையும் வென்றது இந்தியாவின் அன்பு தான்.

இந்தியாவின் முஸ்லீம்கள் மதச்சார்புடையவர்கள் ஆஃப்கானிஸ்தான் பதான்களை விட வித்தியாசமானவர்கள். முக்கிய பிரச்னை என்னவென்றால் ஒருபோதும் இந்தியா ஆஃப்கானிஸ்தான் போல இருக்காது. ஆஃப்கானிஸ்தானில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என நமக்கு தெரியும். அங்கு நரகத்தை விட மோசமானதாக இருக்கிறது. எனவே கதைக்களத்தின் படி படத்துக்கு 'இந்தியன் பதான்' என பெயர் வைத்திருக்க வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:Kangana Ranaut, Shah rukh khan

முக்கிய செய்திகள்