Home / News / entertainment /

கட்டாயப்படுத்திய லோகேஷ் கனகராஜ்... விக்ரம் படத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுத்த சூர்யா!

கட்டாயப்படுத்திய லோகேஷ் கனகராஜ்... விக்ரம் படத்துக்காக கொள்கையை விட்டுக் கொடுத்த சூர்யா!

விக்ரம் கூட்டணி

விக்ரம் கூட்டணி

'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தின் முக்கிய வில்லனாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும், அதில் அவர் கமல்ஹாசனுடன் நேரிடையாக மோதுவார்.

லோகேஷ் கனகராஜின் வற்புறுத்தலால் தனது கொள்கையை விட்டுக் கொடுத்திருக்கிறார் நடிகர் சூர்யா. 

நடிகர் சூர்யா தனது பன்முக நடிப்பால் மக்களைக் கவர்ந்துள்ளார். சமீபத்தில் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான 'விக்ரம்' படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். சில நிமிடங்களே திரையில் வந்தாலும், அவரது கதாபாத்திரம் கை தட்டல்களைப் பெற்றது.

'விக்ரம்' படத்தின் க்ளைமாக்ஸில் சூர்யா ஒரு இரக்கமற்ற கேங்ஸ்டரான ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். அந்த காட்சியில் சிகரெட் பிடித்தவாறு தனது வில்லத்தனத்தைக் காட்டினார். இதற்கு முன் சூர்யா இப்படியான காட்சியை முயற்சி செய்யவில்லை. ஆனால் புகைபிடிக்கும் காட்சி இல்லாமல், அந்த க்ளைமேக்ஸ் காட்சி முழுமை பெறாது என்று உணர்ந்த லோகேஷ் கனகராஜ், சூர்யாவை புகைபிடிக்க கட்டாயப்படுத்தினாராம். ஆக, 'விக்ரம்' படத்தில் தனது கதாபாத்திரத்திற்காக சூர்யா தன் கொள்கையை தளர்த்திக் கொண்டாராம்.

'விக்ரம்' படத்தில் சூர்யா தனது கதாபாத்திரத்திற்காக சம்பளம் வாங்கவில்லை என்பதும், கமல்ஹாசனுடனான தனது பிணைப்புக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் படத்தில் நடித்ததும் குறிப்பிடத்தக்கது. 'விக்ரம்' படத்தின் அடுத்த பாகத்தின் முக்கிய வில்லனாக சூர்யாவின் கதாபாத்திரம் இருக்கும், அதில் அவர் கமல்ஹாசனுடன் நேரிடையாக மோதுவார்.

நாடக கலைஞர்களுக்கு வீட்டில் விருந்து வைத்த ரஜினிகாந்த்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'விக்ரம்' போதைப்பொருள் இல்லாத சமுதாயத்திற்கான RAW ஏஜென்ட்டின் போராட்டத்தைப் பற்றியது. ஆக்‌ஷன் காட்சிகள் நிரம்பிய இப்படம் ரூ.400 கோடிக்கு மேல் வசூலித்து மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது. கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இதில், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், நரேன், செம்பன் வினோத், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:Actor Suriya, Lokesh Kanagaraj