Home / News / entertainment /

கார்த்தியின் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சூர்யா!

கார்த்தியின் விருமன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்த சூர்யா!

விருமன்

விருமன்

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

கார்த்தி நடித்துள்ள விருமன் திரைப்படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என சூர்யா அறிவித்துள்ளார்.

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'கொம்பன்'. நடிகர் கார்த்தி நடித்திருந்த இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார். கிராமத்து கதையை மையப்படுத்திய இந்தப் படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து தற்போது ஆறு ஆண்டுகள் கழித்து 'விருமன்' படத்தின் மூலம் முத்தையா - கார்த்தி கூட்டணி இணைந்துள்ளது.

சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தின் மூலம் இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் ஹீரோயினாக அறிமுகமாகிறார். செப்டம்பரில் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு தேனி மற்றும் மதுரை வட்டாரங்களில் நடைப்பெற்றது.

மகள்களுக்காக காத்திருக்கிறேன்.. மறுமணத்திற்கு பின் டி.இமான் உருக்கம்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தற்போது விருமன் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் படம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 31-ம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.

 

377

 

 

Tags:Actor Karthi, Actor Suriya