Home / News / entertainment /

தேசிய விருது அறிவிக்கப்பட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

தேசிய விருது அறிவிக்கப்பட்ட ‘சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்’ படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டு

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பாரதி கண்டபுதுமைப் பெண்களான மூன்று பெண் கதாப்பாத்திரங்களை வைத்து மூன்றுகதைகளாக்கி இந்த படத்தை வசந்த் உருவாக்கியுள்ளார். – ரஜினிகாந்த்

தேசிய விருது அறிவிக்கப்பட்டசிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இயக்குனர் வசந்த் இயக்கத்தில் வெளிவந்த சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு 3 தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சரஸ்வதி, தேவகி மற்றும் சிவரஞ்சனி என்ற 3 பெண்களின் வாழ்க்கையின் சில பகுதியே படமாக அமைக்கப்பட்டிருக்கும்.

இந்த படத்தில் சிவரஞ்சனியாக லட்சுமி பிரியா சந்திரமவுலி, தேவகியாக பார்வதி மேனன், சரஸ்வதியாக காளீஸ்வரி சீனிவாசன், சந்திரனாக கருணாகரன் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர்.

குக் வித் கோமாளி அம்மு அபிராமிக்கு திருமணமா? அவரே சொன்ன பதில்!

இந்த மூவரின் எதார்த்த வாழ்வையும், சமூகத்தில் பெண்களின் நிலையையும் செயற்கைத் தனமின்றி படமாக்கியிருப்பார் இயக்குனர் வசந்த். சோனி லைவ் ஓடிடி தளத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 26-ம்தேதி வெளியான இந்த திரைப்படம், 3 பெண்களின் கதையை ஆந்தாலஜி ஸ்டைலில் உருவாக்கப்பட்டிருக்கும்.

சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதை தவிர்த்து, சிறந்த எடிட்டிங்கிற்காக இந்த படத்தில் பணியாற்றி ஸ்ரீகர் பிரசாத் மற்றும் சிறந்த துணை நடிகைக்காக லட்சுமி பிரியா சந்திரமவுலி ஆகியோருக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 விருதுகளை அள்ளியுள்ளது சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்.

Actress Sridevi : நடிகை ஸ்ரீ தேவியின் சூப்பர் ஹிட் தமிழ் பாடல்கள் தொகுப்பு…

இந்நிலையில் இந்த படக்குழுவினருக்கு ரஜினிகாந்த் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து படக்குழுவுக்கு ரஜினிகாந்த் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது-

மதிப்பிற்குரிய இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் சார் அவர்களால் உருவாக்கப்பட்ட இயக்குனர்களில் வசந்த் அவர்கள் மிக முக்கியமானவர். பாலச்சந்தர் சார் அவர்களுக்கு மிகவும் பிடித்தவர்.

377

இயக்குனர் வசந்த் அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்துமே நல்ல கருத்தாழமிக்க அருமையான படங்கள்.அவர் இயக்கியுள்ள சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் திரைப்படம் அவர் இயக்கிய படங்களிலேயே அருமையான படம் என்று சொன்னால் அது மிகையல்ல.

பாரதி கண்டபுதுமைப் பெண்களான மூன்று பெண் கதாப்பாத்திரங்களை வைத்து மூன்றுகதைகளாக்கி இந்த படத்தை உருவாக்கியுள்ளார். இதை பார்த்தவர்கள் அனைவரும் இந்த படைப்பை பாராட்டுவதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஏனென்றால் இந்த படத்தை பார்த்த பிறகு அந்த மூன்று கதாப்பாத்திரங்களும் நம் நெஞ்சை விட்டு அகலாது.

இதுபோன்ற அருமையான படத்தை அளித்த வசந்த் அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்.

இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Tags:Rajinikanth