PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சுற்றிவளைத்த ரசிகர்கள் - வீடியோ!

ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினியை சுற்றிவளைத்த ரசிகர்கள் - வீடியோ!

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த்

ராஜஸ்தானில் நடைபெறும் ஜெயிலர் படப்பிடிப்பு தளத்தில் ரஜினிகாந்தை ரசிகர்கள் சுற்றி வளைத்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

இயக்குனர் நெல்சன் திலீப் குமார் ‘பீஸ்ட்’ படத்திற்குப் பிறகு ஜெயிலர் திரைப்பத்தை இயக்குகிறார். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த வருகிறார். கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதில் இடம் பெறும் ரஜினிகாந்தின் 70% காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுவிட்டன.  இன்னும் 30 சதவீத காட்சிகள் மட்டுமே மீதம் இருக்கின்றன. அதில் இரண்டு பாடல் காட்சிகள் மற்றும் ஒரு சண்டைக் காட்சி ஆகியவை இடம்பெறும் என கூறப்படுகிறது.

‘முத்துவேல் பாண்டியன்’ என ரஜினியின் கதாபாத்திரத்துக்கு இப்படத்தில் பெயரிடப்பட்டுள்ளது. அது தொடர்பாக ரஜினியின் பிறந்தநாளன்று வெளியிடப்பட்ட டீசரும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் உடன் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் உடன் ரம்யாகிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். நடிகை தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார்.

ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் தற்போது ராஜஸ்தான், ஜெய்சால்மரில் தீவிரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்துக்கு ரஜினிகாந்தின் கார் வந்தபோது அந்த காரை ரசிகர்கள் சுற்றி வளைத்துக்கொண்டனர். அப்போது மதுரையிலிருந்து வந்திருப்பதாக சில ரசிகர்கள் தெரிவித்தனர். மேலும் ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்க முயற்சித்தனர். ஆனால், ரஜினி காருக்குள் அமர்ந்து இருந்ததால் ரசிகர்களால் செல்ஃபி எடுக்க முடியவில்லை. அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

377

Tags:Rajinikanth

முக்கிய செய்திகள்