• Home
  • »
  • News
  • »
  • entertainment
  • »
  • சரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்

சரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்

முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் நடந்தது. பின்னர் கடந்த 2011-ல் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர்.

சரிதாவை தொடர்ந்து இரண்டாவது மனைவியையும் பிரிந்தார் நடிகர் முகேஷ்
முகேஷ் -சரிதா - மெத்தில்

    நடிகர் முகேஷ் மற்றும் அவரது மனைவி மெத்தில் தேவிகா இருவருக்கும் தற்போது விகாரத்து ஆகியுள்ளது.

    தமிழில் மனைவி ஒரு மாணிக்கம், ஜாதி மல்லி, ஐந்தாம் படை, பொன்னர் சங்கர் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் நடிகர் முகேஷ். மலையாளத்தில் இவர் 260-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கிறார். அதோடு பல விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

    முகேஷுக்கும் நடிகை சரிதாவுக்கும் 1988-ல் திருமணம் நடந்தது. பின்னர் கடந்த 2011-ல் இவர்கள் விவாகரத்து செய்து பிரிந்தனர். இதற்குக் காரணமாக, முகேஷ் ஒரு குடிகாரர் என்றும், பல பெண்களுடன் தொடர்பு வைத்திருக்கிறார் என்றும் சரிதா குற்றம் சாட்டினார். இதையடுத்து பரத நாட்டிய கலைஞர் மெத்தில் தேவிகாவை 2013-ல் முகேஷ் 2-வது திருமணம் செய்து கொண்டார். தற்போது அவருக்கு வயது 64.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்நிலையில் முகேஷ் மற்றும் தேவிகா குடும்ப வாழ்க்கையில் மணமுறிவு ஏற்பட்டுள்ளது. விவாகரத்து செய்துகொள்ள முடிவு செய்து இருவரும், குடும்ப நலக்கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். இதுகுறித்து கூறிய தேவிகா, “முகேஷ் நல்ல கணவர் இல்லை. 8 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்தும் அவரை என்னால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. இன்னும் எத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் அவரை புரிந்துகொள்ள முடியாது. எனவே தான் அவரை பிரிய முடிவு செய்தேன். எனக்கு முகேஷ் மீது எந்த கோபமும் இல்லை. விவாகரத்து என்பது தனிப்பட்ட முறையில் நான் எடுத்த முடிவு’’ என்று தெரிவித்துள்ளார்.

    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    377

    Published by:Shalini C
    First published:July 28, 2021, 09:53 IST

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube