Home / News / entertainment /

பெருமை கொள்ளுங்கள் சகோதரரே... சூர்யாவுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து!

பெருமை கொள்ளுங்கள் சகோதரரே... சூர்யாவுக்கு நடிகர் கமல் ஹாசன் வாழ்த்து!

கமல் - சூர்யா

கமல் - சூர்யா

கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக நடித்திருந்தார் சூர்யா.

ஆஸ்கர் குழுவில் இடம்பெற்றுள்ள நடிகர் சூர்யாவுக்கு, நடிகர் கமல் ஹாசன் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரைப்போற்று மற்றும் ஜெய்பீம் ஆகியப் படங்கள், ஆஸ்கர் விருதுப் போட்டியில் இடம்பெற்றன. ஆனால் இறுதிப் பட்டியலுக்கு முன்பாக ஆஸ்கரை விட்டு வெளியேறின. இதில் குறிப்பாக ஜெய்பீம் திரைப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் சில காட்சிகளை ஆஸ்கர் தனது அதிகாரப்பூர்வ யூ-ட்யூப் சேனலில் பதிவேற்றியிருந்தது.

இந்நிலையில் வரும் 95-வது அகாடமி விருது விழாவின் குழு உறுப்பினராக சூர்யாவுக்கு அழைப்பு விடுத்திருந்தது ஆஸ்கர் அமைப்பு. இதையடுத்து அவருக்கு பிரபலங்களும், ரசிகர்களும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

வெட்டிங் ட்ரெஸ்ஸில் தேவதையாக கீர்த்தி சுரேஷ்!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதற்கிடையே நடிகர் கமல் ஹாசன், சூர்யாவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், “தம்பி சூர்யா ஆஸ்கர் மண்ணை மிதிப்பதில் மகிழ்ச்சி. பல தேவதைகளையும் நட்சத்திரங்களையும் உருவாக்கி சாதனை படைத்து வருகிறோம். ஆகவே ஆஸ்கர் உறுப்பினராக இணைவதில் பெருமைக் கொள்ளுங்கள் சகோதரரே” என்று தெரிவித்துள்ளார்.

கமலின் அந்த ட்வீட்டுக்கு, ‘நன்றி அண்ணா’ என பதிலளித்துள்ளார் சூர்யா. தவிர சமீபத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற போதைப்பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக நடித்திருந்தார் சூர்யா. இந்தப் படத்தின் அடுத்த பாகத்தில் கமலும், சூர்யாவும் நேருக்கு நேர் மோதுவார்கள் என்று தெரிகிறது.

377

Tags:Actor Suriya, Kamal Haasan