PREVNEXT
முகப்பு / செய்தி / பொழுதுபோக்கு / Atharvaa: லைகா தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய படம்..

Atharvaa: லைகா தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் புதிய படம்..

இந்தியன் 2 படம் பாதியில் நிற்க, அடுத்தடுத்தப் படங்களை தயாரிக்கிறது லைகா நிறுவனம். இவர்கள் தயாரிப்பில் அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படம் இன்று பூஜையுடன் தொடங்கியது. 

அதர்வா

அதர்வா

லைகா, ஏஜிஎஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் கொரோனா ஊரடங்குக்குப் பின் சின்ன பட்ஜெட் படங்களின் மீது அதிக ஆர்வம் காட்டுகின்றன. சின்ன பட்ஜெட் என்றால், இந்நிறுவனங்களைப் பொறுத்தவரை எட்டு கோடிகளுக்குள். லைகா இன்று அதர்வா, ராஜ்கிரண் நடிக்கும் படத்தை பூஜையுடன் தொடங்கியது. களவாணி படத்தை இயக்கிய சற்குணம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

அதர்வா நடிப்பில் குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே படங்கள் முடிந்து வெளியீட்டுக்கு தயாராக உள்ளன. அட்ரஸ், ஒத்தைக்கு ஒத்த, ருக்குமணி வண்டி வருது படங்கள் அண்டர் புரொடக்ஷனில் உள்ளன. அத்துடன், இந்தப் புதிய படத்திலும் நடிக்கிறார். ஏற்கனவே சற்குணம் இயக்கத்தில் அதர்வா சண்டி வீரன் படத்தில் நடித்திருந்தார். இந்த புதிய படத்தில் ராஜ்கிரண் அதர்வாவுடன் நடிக்கிறார்.

Photos: அரபு நாடே அசந்து நிற்கும் அழகியா! நடிகை பூர்ணா லேட்டஸ்ட் போட்டோஸ்..

களவாணி, வாகை சூடவா படங்களுக்குப் பிறகு சற்குணம் இயக்கிய எந்தப் படமும் வெற்றி பெறவில்லை. அந்த தோல்வி சரித்திரத்தை இந்தப் புதிய படம் மாற்றும் என நம்புவோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:Actor Atharvaa

முக்கிய செய்திகள்