சினிமா பிரபலங்கள் முதல் பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் வரை சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாகவே இருந்து வருகிறர்கள். சோஷியல் மீடியாக்களில் தங்களை பின்தொடரும் ஃபாலோயர்ஸை நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் கேள்வி பதில் செஷனை அவ்வப்போது நடத்தி வருகின்றனர். இதனால் பிரபலங்களை சோஷியல் மீடியாவில் ஃபாலோ செய்பவர்களும், ரசிகர்களும் உற்சாகமாகி விடுகின்றனர். மற்றவர்களை போல பெண் சினிமா பிரபலங்களும் தங்களது அதிகாரப்பூர்வ சோஷியல் மீடியாவில் question and answer session நடத்தி வருகின்றனர். அந்த வகையில் 1990-களில் தமிழ் திரையுலகில் சிறந்த கதாநாயகிகளில் ஒருவராக திகழ்ந்த நடிகை மீனா இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கிறார். நடிகை மீனாவை 4 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்ஸ்டாவில் ஃபாலோ செய்து வருகின்றனர்.
இந்நிலையில் மீனா தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டா பக்கத்தில் தனது ஃபாலோயர்ஸ்களுக்காக சமீபத்தில் கேள்வி பதில் செஷனை நடத்தினார். இந்த செஷனின் போது ரசிகர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஒளிவு மறைவின்றி பதில் அளித்தார் மீனா. தன்னிடம் கேள்வி கேட்க நினைப்பவர்கள் கேள்விகளை கேட்கலாம் என்றும் அறிவித்த மீனா, ரசிகர்களிடம் இருந்து சுமார் 10,000-க்கும் மேற்பட்ட கேள்விகளை பெற்றார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் நடிகை மீனா சில சிக்கலான கேள்விகளுக்கு கூட பொறுமை இழக்காமல், கோபப்படாமல் பக்குவமாக லேசான முறையில் பதிலளித்தார். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்ட ஒரு ரசிகருக்கு பதில் அளித்த மீனா, கணவருடன் மணக்கோலத்தில் இருக்கும் ஃபோட்டோவை ஷேர் செய்து கொஞ்சம் லேட் என்று கண்சிமிட்டும் ஃபன் எமோஜியுடன் வேடிக்கையாக பதில் கொடுத்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மற்றொரு ரசிகர் நான் 20 ஆண்டுகளுக்கு முன் சென்று மீண்டும் பிறந்து உங்களை திருமணம் செய்ய விரும்புகிறேன் என்று கூறியதற்கு, நல்ல ஆசை என்ற பொருள்படும்படி 'Awww 'என்று குறிப்பிட்டுள்ளார் மீனா. தனுஷ் அல்லது சிம்பு இருவரில் சிறந்த நடிகர் யார் என்ற கேள்விக்கு சாமர்த்தியமாக இருவரும் என்று பதில் அளித்துள்ளார். தமிழில் பாபநாசம் 2-வில் நீங்கள் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு நடிகர் கமலிடம் கேளுங்கள் என்று கூறி உள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Actress meena