ஸ்மார்ட் சிட்டி அந்தஸ்தைப் பெற்ற கோவை மாநகரில் மேம்பாலங்கள் அமைத்தல், சாலைகளில் எல்இடி விளக்குகள் பொருத்துதல், மாடல் சாலைகள் அமைத்து சர்வதேச தரத்தில் நகரை உருவாக்குதல் மற்றும் குளக்கரைகளை மேம்படுத்துதல் ஆகிய மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஒரு பக்கம் கோவையை அழகாக்கும் பணிகள் நடைபெற்று வரும் சூழலில் மறுபக்கம் அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
கோவை புலியகுளம் பகுதியில் அமைந்துள்ளது மசல் லே-அவுட். இங்கு சுமார் 200 குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிக்கும் பெரும்பாலான மக்கள் கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
தனித்தமிழ்நாடு பிரிவினை வாதம்.. ஆ.ராசா அத்தியாயம் முடிய போகிறது - சி.பி.ராதாகிருஷ்ணன்
அடகு நகைகளை மீட்டு தரும் நிறுவனங்களிடம் மோசடி.. கில்லாடி நபர் சிக்கினார்..
Coimbatore | பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச மாஸ்க்- ரயில் நிலையத்தில் புதிய முயற்சி
கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது...
கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகர் போக்சோவில் கைது
ஜார்கண்ட்டிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு- வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த காவல்துறை
வாளையாறு அருகே கேரளாவுக்கு “ஸ்பிரிட்” ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து...
மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி மோசடி.. ரூ.6 லட்சம் ஏமாற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரிக்கு வலை
கோவையில் அதிமுக போஸ்டர் யுத்தம்.. இபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்
பெண்களுக்கு ரூ.1000 வாக்குறுதி என்னாச்சு.. மக்களை ஏமாற்றும் திமுக அரசு - வானதி சீனிவாசன்
பொள்ளாச்சி: ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு
இந்த 200 வீடுகளில் வசிக்கும் பொதுமக்களும் அங்கு உள்ள பொது கழிவறை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அந்த கழிவறையும் முறையான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இதனால் பெண்கள் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மசால் லே அவுட் பகுதியில் செல்லும் கால்வாய் மீது கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கான்கிரீட் தளம் ஆங்காங்கே உடைந்திருப்பதால், அவ்வழியாக செல்பவர்களும், விளையாடும் குழந்தைகளும் சாக்கடைக்குள் விழும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. சுகாதாரம் என்றால் எங்கு கிடைக்கும் என்பதை போல், வீதியெங்கும் குப்பைக்கழவுகள் குவிந்து கிடக்கின்றன.
தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இந்த பகுதி தூய்மையே இல்லாமல் நோய் பரப்பும் கூடம் போல் உள்ளது. கடந்த 70 ஆண்டுகளாக மசால் லே-அவுட் இந்த நிலையிலேயே இருப்பதாகவும், பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குமுறுகின்றனர் இப்பகுதி மக்கள்.
கோவையை அழகாக்கும் முன் மக்களின் அடிப்படைத் தேவைகளை இந்த அரசு பூர்த்தி செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
செய்தியாளர் : சௌந்தர்மோகன்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags:Coimbatore