Home / News / coimbatore /

படிக்கும் போதே வருமானம் ஈட்டி அசத்தும் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள்.!

படிக்கும் போதே வருமானம் ஈட்டி அசத்தும் கோவை கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவிகள்.!

Coimbatore District: கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை மற்றும் வெகேஷனல் துறை படிப்புகள் உள்ளன.

தென்னிதியாவின் மான்செஸ்டரான கோவை மாவட்டத்தில் ஜவுளித்தொழில் முக்கியமான தொழிலாக உள்ளது. இங்கு மாணவ பருவத்திலேயே ஜவுளி பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றனர் மாணவிகள்.

கோவை பீளமேடு பகுதியில் பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆடை வடிவமைப்புத்துறை மற்றும் வெகேஷனல் துறை படிப்புகள் உள்ளன.

இங்கு மாணவிகளுக்கு ஆடை வடிவமைப்பு மற்றும் தயாரிப்பு, ஸ்கிரீன் பிரிண்டிங், தையல், தயாரித்த ஆடைகளை சந்தைப்படுத்துதல் உள்ளிட்டவை கற்றுத்தரப்படுகின்றன.ஆடைகள் மட்டுமல்லாது விதவிதமான வண்ணமயமான அணிகலன்கள் தயாரிக்கும் பயிற்சியும் வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் நகரத்திலிருந்து (Coimbatore)

Coimbatore | பிளாஸ்டிக் பாட்டில் கொடுத்தால் இலவச மாஸ்க்- ரயில் நிலையத்தில் புதிய முயற்சி

பெண்களுக்கு ரூ.1000 வாக்குறுதி என்னாச்சு.. மக்களை ஏமாற்றும் திமுக அரசு - வானதி சீனிவாசன்

மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி மோசடி.. ரூ.6 லட்சம் ஏமாற்றிய போலி ஐபிஎஸ் அதிகாரிக்கு வலை

பொள்ளாச்சி: ஆழியார் குரங்கு அருவியில் குளிக்க தடை - வனத்துறை அறிவிப்பு

அடகு நகைகளை மீட்டு தரும் நிறுவனங்களிடம் மோசடி.. கில்லாடி நபர் சிக்கினார்..

கோவையில் அதிமுக போஸ்டர் யுத்தம்.. இபிஎஸ்-க்கு எதிராக களமிறங்கிய ஓபிஎஸ் ஆதரவாளர்கள்

தனித்தமிழ்நாடு பிரிவினை வாதம்.. ஆ.ராசா அத்தியாயம் முடிய போகிறது - சி.பி.ராதாகிருஷ்ணன்

ஜார்கண்ட்டிலிருந்து விமானம் மூலம் கோவை வந்து திருட்டு- வழிப்பறியில் ஈடுபட்ட 7 பேரைக் கைது செய்த காவல்துறை

கோவையில் 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் - மதபோதகர் போக்சோவில் கைது

வாளையாறு அருகே கேரளாவுக்கு “ஸ்பிரிட்” ஏற்றி சென்ற டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து...

கோவையில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் கைது...

இந்த படிப்பை ஆர்வத்துடன் கற்கும் மாணவிகள் ஆடை மற்றும் அணிகலன்கள் தயாரிப்பில் அசத்தி வருகின்றனர்.

தயாரிக்கும் ஆடைகளை அவ்வப்போது நடைபெறும் கண்காட்சிகளிலும், கல்லூரி விழாக்களிலும் சந்தைப்படுத்தி வருவாய் ஈட்டுகின்றனர். இந்த கல்லூரி வளாகத்திலேயே மாணவிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்யவும், பிற ஆர்டர்களை எடுப்பதற்காகவும் பிரத்யேக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

வகை வகையான ஆடைகளுடன் பார்ப்பதற்கு ஷோரூம் போல் காட்சியளிக்கும் இந்த இடம் தான் மாணவிகள் வருவாய் ஈட்ட உதவும் அச்சாரம் என்றால் அது மிகையாகாது.

மனிதன் வாழ அத்தியவசியமான பொருட்களுள் ஒன்றான ஆடைகளை நேர்த்தியாக தயாரிக்கும் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மாணவப்பருவத்திலேயே வருவாயையும் ஈட்டி வரும் மாணவிகள் வரும் காலத்தில் சிறந்த தொழில் முனைவோர்களாக வருவதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

செய்தியாளர் : சௌந்தர்மோகன்

Tags:Coimbatore