கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு நடந்த கார் வெடிப்பு தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கார் வெடிப்பு ஒரு திட்டமிட்ட தாக்குதல் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கோவை மாநகர போலீசார் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளும் , போலீசாரும் இந்த வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முபீன் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்ட சந்தேகத்திற்குரிய ஆவணங்களில் தடை செய்யப்பட்ட அமைப்பான ஐ.எஸ் அமைப்பிற்கு ஆதரவாக சில குறிப்புகள் கைப்பற்றபட்டு இருந்தது. மேலும் ஜிகாத் குறித்தும் ஹதீஸ் குறித்தும் எழுதப்பட்ட குறிப்புகளும் , ஜிகாத் யாருக்கு கடமை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டிருந்தது.
மேலும் சிலேட்டில் ஐ. எஸ் அமைப்பிற்கான வாசகங்கள் அரபுமொழியில் எழுதப்பட்டிருந்ததும் தெரியவந்தது. கோவை மாநகர போலீசார் கைப்பற்றிய இந்த ஆவணங்களின் ஒரு சில பகுதிகளை நேற்று நியூஸ் 18 தமிழ்நாடு சேனல் ஒளிபரப்பியது.
ஆக்கிரமிப்பு அபாயத்தில் கோவையின் நூற்றாண்டுகள் பழமையான பாத குட்டை..
Social media influencer ஆகனுமா? அதில் என்ன வருமானம்? மாடல் ஐஸ்வர்யா தரும் டிப்ஸ் இதோ!
இது சாலையா இல்ல ஓடையா? கோவையில் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் பொதுமக்கள்..!
“மொய் பணம் வேண்டாம் புத்தகங்கள் போதும்..” கோவையில் நடந்த திருமணத்தில் புதுமுயற்சி..!
வானத்தில் இருந்து கொட்டிய ஐஸ்கட்டி..! கோவையில் ஆலங்கட்டி மழையை ரசித்த மக்கள்..!
காதல் மனைவியை 21 நாட்களில் கொலை செய்து நாடகமாடிய கணவன்... அம்பலமான உண்மை..!
கோவையில் தொடர்ந்து உயிரிழக்கும் மயில்கள்.. வன ஆர்வலர்கள் அதிர்ச்சி..!
கண்களுக்கு விருந்தாக நடந்த வள்ளி கும்மியாட்டம்..! காரமடை அருகே கோயில் திருவிழாவில் கோலாகலம்..!
‘டாஸ்மாக் கடைகளை கள்ளுக்கடையா மாத்துங்க..’ - கோவை ஆட்சியரிடம் மனு அளித்த இந்து மக்கள் கட்சியினர்
கோவையில் வெளுத்து வாங்கிய கனமழை.. சாலையில் தேங்கிய மழைநீர்!
கோவை தொட்டிபாளையம் முத்து மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா கோலாகலம்!
Also see... தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை? - விவரம் இதோ
சிசிடிவி காட்சிகளில் இருந்த உடைகளும், கார் வெடிப்பின் போது இருந்த உடைகளும் வேறு வேறு என்பதும் , உடலை சேவ் செய்து குளித்து ,வேறு உடைமாற்றி தொழுகை செய்து விட்டு சென்று இருப்பதும் தெரியவந்துள்ளது. மேலும் முபீனுக்கு வழிகாட்டியாக இருந்தது யார் என்பது குறித்தும் விசாரணையானது நடைபெற்று வருகின்றது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags:Attack, Blast, Car, Coimbatore, Suicide