PREVNEXT
ஹோம் / நியூஸ் / சென்னை /

நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

நள்ளிரவில் பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞர் கைது..!

ஸ்ரீகாந்த்

ஸ்ரீகாந்த்

Chennai | கீழ்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள பெண்கள் விடுதியில் மெடிக்கல் கல்லூரி மாணவி ஒருவர் மற்றும் கலை கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்டம் சித்தூர் பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த்(22) என்ற நபர் கீழ்ப்பாக்கம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கீழ்பாக்கம் பகுதியிலுள்ள பெண்கள் விடுதியில் நேற்று இரவு புகுந்த ஸ்ரீகாந்த், தூங்கிக் கொண்டிருந்த கலைக்கல்லூரி மாணவி ஒருவருக்கும் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவிகள் எழுந்து சத்தமிட ஸ்ரீகாந்த் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

பின் இரண்டு மணி நேரம் கழித்து பெண்கள் விடுதியில் தவறவிட்ட மொபைல் போனை எடுப்பதற்காக மீண்டும் வந்துள்ளார். அப்போது விழித்திருந்த பெண்கள் ஸ்ரீகாந்தை கையும் களவுமாக பிடித்து தாக்கி கீழ்ப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

கலைக் கல்லூரி மாணவி மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு முன்னதாக மேலும் இரண்டு மாணவிகள் தூங்கிக் கொண்டிருந்தபோது பாலியல் தொல்லை கொடுத்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உங்கள் நகரத்திலிருந்து (சென்னை)

''சேகர் பாபு ஒரு செயல் பாபு.. அவர் என்னையே வேலை வாங்குவார்''.. புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

40 வெடிகுண்டுகள்... 36 பட்டாகத்திகள்... பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த ரவுடியை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

கொரோனாவுக்கு பலியான அரசு மருத்துவரின் மனைவிக்கு கருணை அடிப்படையில் பணி... தமிழக அரசு பரீசிலிக்க உத்தரவு

சென்னை விமான நிலையத்தில் பார்க்கிங் டோக்கன் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

'பூங்கா.. பஸ்.. இனி மாற்றுத்திறனாளிகளுக்கு பொது இடங்கள் உகந்தவையாக இருக்கும்' - உறுதி அளித்த உதயநிதி

''நாமே குழந்தை.. நமக்கு ஏன் இன்னொரு குழந்தை''.. திருமண விழாவில் கலகலவென பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்!

பச்சை நிற ஆவின் பால் பாக்கெட்களுக்கு தட்டுப்பாடு - அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

முருங்கைக்காய் விலை திடீரென கிடுகிடு உயர்வு

நிமிர்ந்து நில் பட பாணியில் போலி அரசு ஆவணங்களை தயாரித்த இருவர்.. அம்பத்தூரில் அதிர்ச்சி!

''விஜய் அரசியலுக்கு வர வேண்டும்..'' தங்கத் தேர் இழுத்து வழிபாடு நடத்திய ரசிகர்கள்!

''மன்னராட்சியானாலும் மக்களாட்சினாலும் கோயில் மக்களுடையது'' - முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

போலீசாரின் தொடர் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்தின் தந்தை  ஸ்டார் இன்சூரன்ஸில் மேனேஜராகவும் அவரது தாய் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் தலைமை செவிலியராகவும் பணியாற்றி வருவது தெரியவந்தது.

Also see...  குற்றங்களை தடுக்க நடவடிக்கையை வேகப்படுத்துங்கள் : தமிழக காவல்துறைக்கு அண்ணாமலை சொன்ன அட்வைஸ்!

மேலும் கைது செய்யப்பட்ட ஸ்ரீகாந்த் மெட்ராஸ் மெடிக்கல் கல்லூரியில் அனஸ்தீஸியா கிரிட்டிகள் கேர் என்ற டிப்ளமோ படிப்பை கடந்த 2021 ஆம் ஆண்டு முடித்துள்ளதும், தற்போது சேத்துப்பட்டு நவரோஜி சாலையில் உள்ள கந்தசாமி பாய்ஸ் ஹாஸ்டலில் தங்கி திநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டுள்ள ஸ்ரீகாந்திடம் கீழ்பாக்கம் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags:Chennai, Crime News, Sexual harrasment

சிறந்த கதைகள்